செய்தி வெளியீடு: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில், சென்னை, எழும்பூரில் உள்ள தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) அலுவலக கூட்ட அரங்கில் இன்று (24.06.2026) தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. சி.அ. ராமன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் சிப்காட் சார்பாக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அனைத்து பிரிவு அலுவலர்களுடன் ஆலோசனை செய்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், தொழில் பூங்காக்களை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்துதல், தற்போதுள்ள சிப்காட் தொழில் பூங்காக்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் இரசாயனப் பொருட்களை தகுந்த வழிமுறை மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் பயன்படுத்துவதை உறுதி செய்தல், சிப்காட் தொழில் பூங்காவின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், சிப்காட் வளாகம் மற்றும் அதன் அருகாமையில் உள்ள இடங்களை தேர்வு செய்து, இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், விளையாட்டு திடல்களை உருவாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மேலும், சிப்காட் நிறுவனம் மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் துரிதமாக செயல்படுத்திட அனைத்து அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி. அ. கேத்தரின் சரண்யா, இ.ஆ.ப., மற்றும் சிப்காட் நிறுவனத்தின் அனைத்து பிரிவை சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1சிப்காட் நிறுவன தொழில் பூங்காக்களை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்துதல்.
- 2தற்போதுள்ள சிப்காட் தொழில் பூங்காக்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் இரசாயனப் பொருட்களை தகுந்த வழிமுறை மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் பயன்படுத்துவதை உறுதி செய்து, தினசரி கண்காணித்து தலைமையிடத்திற்கு அறிக்கை சமப்பித்தல்.
- 3சிப்காட் தொழில் பூங்காவின் உட்கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக மேம்படுத்துதல்.
- 4இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், சிப்காட் வளாகம் மற்றும் அதன் அருகாமையில் உள்ள இடங்களை தேர்வு செய்து விளையாட்டு திடல்களை உருவாக்குதல்.
- 5சிப்காட் நிறுவனம் மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் துரிதமாக செயல்படுத்த அனைத்து அலுவலர்களும் தங்குதடையின்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல்.