TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
மருத்துவம், பொது சேவை, துவக்க விழா

நடமாடும் மேமோகிராம் பரிசோதனை வாகனம் துவக்கம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள், காவேரி மருத்துவமனை, லயன்ஸ் கிளப் மற்றும் கே.வி.ஜி.டிரஸ்ட் இணைந்து உருவாக்கிய மார்பகப் புற்றுநோய் கண்டறியும் நடமாடும் மேமோகிராம் பரிசோதனை வாகனத்தை துவக்கி வைத்தார்.

விரிவான சுருக்கம்

25.06.2026 அன்று, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், லயன்ஸ் கிளப் மற்றும் கே.வி.ஜி.டிரஸ்ட் இணைந்து மகளிர் பயன்பாட்டிற்காக உருவாக்கி உள்ள மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் கண்டறியும் நடமாடும் மேமோகிராம் பரிசோதனை வாகனத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வின் முன்னதாக, பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் உடல்நலத்தினை பேணுவதன் முக்கியத்துவம், ஆண்கள் பெண்கள் மீது அக்கறை வெளிப்படுத்துவதன் அவசியம் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனையின் தேவை குறித்து அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார். காவேரி மருத்துவமனை இணை நிறுவனர் டாக்டர்.அரவிந்தன், மருத்துவ இயக்குநர் டாக்டர். அய்யப்பன் பொன்னுசாமி, லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் திரு.லயன் எஸ்.போஸ், மாவட்ட ஆளுநர், தலைவர், சென்னை லயன்ஸ் கிளப், கே.வி.ஜி.டிரஸ்ட் திரு.லயன் கே.வி.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் கண்டறியும் நடமாடும் மேமோகிராம் பரிசோதனை வாகனம் துவக்கம்
  • 2
    பெண்கள் பாதுகாப்பு மற்றும் உடல்நலன் பேணுவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தல்
  • 3
    மார்பக புற்றுநோய் பரிசோதனையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்