#Health
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Health குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
ஜனநாயக மாண்பையும் மக்கள் நலனையும் முன்னிறுத்திய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடர்
ஜனநாயக மாண்பையும் மக்கள் நலனையும் முன்னிறுத்திய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடர் 28 நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தொடரில், முதலமைச்சர் விதி 110-ன் கீழ் 17 அறிக்கைகளையும், 51 துறைகளின் சார்பில் 1,117 அறிவிப்புகளையும் வெளியிட்டார். மேலும், 13 சட்ட முன்வடிவுகளும் 9 அரசினர் தனித் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மற்றும் தாய்க்கும் தங்க மோதிரம் வழங்கப்படும்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
தமிழ்நாடு முதலமைச்சர், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறார், அவரை முதல் பெண் மருத்துவராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும், பெண்களின் மேம்பாடு மற்றும் சமூக நலனுக்கான அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காகவும் நினைவுகூருகிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் "நலம் TN" என்ற தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை இணையதளத்தைத் தொடங்கி வைத்து, ரூ.139.47 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்ததுடன், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் (நிலை-ll) ஆகியோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் "நலம் TN" இணையதளத்தைத் தொடங்கி வைத்து, ரூ.139.47 கோடி மதிப்பிலான மருத்துவக் கட்டடங்கள் மற்றும் உபகரணங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்ததுடன், 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
அமைச்சர் ப.வெங்கடரமணன் மயிலாப்பூர் பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தார்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மையத்திற்கு ஆய்வு செய்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்தார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.6.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, பாலவாக்கம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமைத் தொடங்கி வைத்தார்கள்.
நடமாடும் மேமோகிராம் பரிசோதனை வாகனம் துவக்கம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள், காவேரி மருத்துவமனை, லயன்ஸ் கிளப் மற்றும் கே.வி.ஜி.டிரஸ்ட் இணைந்து உருவாக்கிய மார்பகப் புற்றுநோய் கண்டறியும் நடமாடும் மேமோகிராம் பரிசோதனை வாகனத்தை துவக்கி வைத்தார்.
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கி, வாகனத்தை இயக்கித் தொடங்கி வைத்தார்.