TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#El Nino

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட El Nino குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

25 ஜூன், 2026PR #295

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு 2026 குறுவை பருவ நெற்பயிர் மற்றும் இதர பயிர்களை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஜுலை 31ம் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர. வினோத் அவர்கள் வேண்டுகோள்.

மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்கள், இயற்கை சீற்றங்கள் மற்றும் எல் நினோ தாக்கத்தால் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாக்க, 2026 குறுவை பருவ நெற்பயிர் மற்றும் இதர பயிர்களுக்கு ஜூலை 31, 2026-க்குள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளை வலியுறுத்தியுள்ளார்.