TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Processing Units

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Processing Units குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

3 ஜூன், 2026PR #159

"பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கத்தில்" பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்/தனிநபர்கள் அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை மானியம் பெற மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர.வினோத் அவர்கள் தகவல்

உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கி, பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திடும் நோக்கில் தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறையின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்" 2025-26-ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்படுகிறது. உற்பத்தியாகும் பயறுவகைகளை மதிப்புக்கூட்டிட ஏதுவாக இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை இந்த நிதியாண்டிலும் (2026–27) வழங்கப்பட உள்ளது.