TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
கல்வி மற்றும் சேர்க்கை

2026-2027 கல்வியாண்டு முதல் கவின் கலைக்கல்லூரிகள் BFA சேர்க்கைக்கு ஒருங்கிணைந்த மாநில நுழைவுத் தேர்வு

கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் அரசு கவின் கலைக்கல்லூரிகள் இளங்கலை பட்டப்படிப்பு (BFA) மாணவர் சேர்க்கை 2026-2027 ஆம் கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த நாட்டத் தேர்வு நடத்தி ஒற்றை சாளர முறை சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான சுருக்கம்

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் சென்னை கவின் கலைக்கல்லூரி, கும்பகோணம் கவின் கலைக்கல்லூரி மற்றும் மதுரையில் உள்ள கவின் கலைக்கல்லூரி என மூன்று கவின் கலைக்கல்லூரிகள் இளங்கலை பட்டப்படிப்பு (BFA) மாணவர் சேர்க்கைக்காக 2026-2027 ஆம் கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த நாட்டத்தேர்வு நடத்தி ஒற்றை சாளர முறையில் சேர்க்கை நடத்தப்படும். இம் மூன்று கல்லூரிகளும் தேர்வு மையங்களாக செயல்படும். மாணவர்கள் நாட்ட தேர்வுக்கு எந்த மையத்தையும் தேர்வு செய்யலாம். இளங்கலை பட்டப்படிப்பில் சேர பனிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பம் மற்றும் பிற விவரங்கள் கலை பண்பாட்டுத்துறையின் இணையத்தளத்தில் www.artandculture.tn.gov.in-ல் காணலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 08.06.2026. முதுகலை பட்டப்படிப்புகளுக்கான (MFA) சேர்க்கை ஏற்கனவே உள்ள முறையிலேயே செயல்படுத்தப்படும். கல்லூரிகள் வண்ணக்கலை (Painting), காட்சித்தொடர்பு வடிவமைப்பு (Visual Communication Design), சிற்பக்கலை (Sculpture), சுடுமண் ஆலயக வடிவமைப்பு (Industrial Design in Ceramic), துகிலியல் (Industrial Design in Textile), பதிப்போவியம் (Print Making), ஒருங்கிணைந்த வடிவமைப்பு (Integrated Design), இயங்கு பட வடிவமைப்பு மற்றும் காட்சி வழி தொடர்பு (Animation and Visual Effects) ஆகிய பிரிவுகளை வழங்குகின்றன.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் கவின் கலைக்கல்லூரிகள் இளங்கலை பட்டப்படிப்பு (BFA) மாணவர் சேர்க்கை 2026-2027 ஆம் கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த நாட்டத் தேர்வு நடத்தி ஒற்றை சாளர முறை சேர்க்கை நடைபெறும்.
  • 2
    சென்னை, கும்பகோணம், மதுரை ஆகிய மூன்று கவின் கலைக்கல்லூரிகள் தேர்வு மையங்களாக செயல்படும்.
  • 3
    விண்ணப்பிக்க கடைசி நாள் 08.06.2026.
  • 4
    முதுகலை பட்டப்படிப்புகளுக்கான (MFA) சேர்க்கை ஏற்கனவே உள்ள முறையிலேயே செயல்படுத்தப்படும்.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்