TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Government

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Government குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

14 அக்., 2026PR #845

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: தமிழ்நாட்டில் 1.6 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவார்கள்

தமிழ்நாடு அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் மக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டத்தை அனைத்து 38 மாவட்டங்கள், 15,437 கிராமங்கள் மற்றும் 651 நகரங்களில் 1.6 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் மேற்கொள்வார்கள் என்று அறிவித்துள்ளது. பொதுமக்கள் முழுமையான தகவல்களை வழங்கவும், சுய-கணக்கெடுப்பு வசதியைப் பயன்படுத்தவும் வலியுறுத்தப்படுகிறார்கள், ஆன்லைன் போர்ட்டலுக்கான தேதிகள் ஜனவரி 2027-ல் அறிவிக்கப்படும்.

8 அக்., 2026PR #813

மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 23 பத்திரிகையாளர்களுக்கு ரூ.15,000/- மாதந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும், பத்திரிகையாளர் நல நிதியுதவியாக 3 பத்திரிகையாளர்களுக்கு ரூ.5,90,000/- காசோலைகளையும் வழங்கினார்.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் பத்திரிகையாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ஆணைகள் மற்றும் நல நிதி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (08.10.2026) நடைபெற்றது. மாண்புமிகு அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் 23 பத்திரிகையாளர்களுக்கு மாதந்திர ஓய்வூதிய ஆணைகளையும், 3 பத்திரிகையாளர்களுக்கு நல நிதி உதவிகளையும் வழங்கினார்.

8 அக்., 2026PR #810

மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் தலைமையில் தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் மற்றும் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள், கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரைத் தொழிலின் எதிர்கால வளர்ச்சி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

29 செப்., 2026PR #757

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கு Skoch விருது

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, போட்டித் தேர்வுகளுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி சேவைகளுக்காக SKOCH Silver விருதைப் பெற்றது.

19 செப்., 2026PR #702

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தனித்தேர்வர்களுக்கான முதனிலைத் தேர்வு, நவம்பர் 2026

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஜூலை 2027-இல் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்துகொள்ள தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கான முதனிலைத் தேர்வு நவம்பர் 2026-இல் நடைபெறும்.

17 செப்., 2026PR #685

நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களுக்கான புதிய இணையவழி கொள்முதல் நடைமுறைகள் குறித்து மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வ.காந்திராஜ் அவர்கள் ஆய்வு

நுகர்வோர் கூட்டுறவு நிறுவனங்களுக்கான பழைய கூட்டு கொள்முதல் குழு முறை கலைக்கப்பட்டு, புதிய இணையவழி கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வ.காந்திராஜ் அவர்கள் இன்று (17.09.2026) தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

9 செப்., 2026PR #631

"ஒரு நாட்டிற்கு பெருமை சேர்ப்பது விளையாட்டுத்துறை மாணவ, மாணவிகள் கல்விக்கு இணையாக விளையாட்டையும் கருத வேண்டும்" 2026 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து, மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு

மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா 2026 முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். இதில் சாதனை அளவிலான பங்கேற்பு, ஆசிய விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள் கட்டப்படும் என்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

3 செப்., 2026PR #609

வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த கிலோ ரூ.35/-க்கு வெங்காயம் விற்பனை தொடக்கம் -மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் மற்றும் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.வ.காந்திராஜன் ஆகியோர் விற்பனையை தொடங்கி வைத்தார்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் பொதுமக்களுக்கு தரமான வெங்காயம் குறைந்த விலையில் தடையின்றிக் கிடைக்கும் வகையில் சந்தை குறுக்கீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தவும், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் (NAFED) மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) ஆகியவற்றின் மூலம், முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கிலிருந்து தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 03.09.2026 முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம், கிலோ ரூ.35/- என்ற மானிய விலையில் தமிழ்நாடு முழுவதும் வெங்காயம் விற்பனை செய்யப்படும்.

3 செப்., 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (3.9.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-இன் கீழ், சென்னையில் நவீன வசதிகளுடன்கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் அமைப்பது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், சென்னையில் நவீன வசதிகளுடன்கூடிய புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைப்பது குறித்து விதி எண் 110-இன் கீழ் அறிவித்தார். தற்போதுள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இடப்பற்றாக்குறை மற்றும் விரிவாக்க முடியாத நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

24 ஆக., 2026

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு கைவிட்டுள்ளது. மாற்று இடங்கள் ஆராயப்பட்டு வருகின்றன, மேலும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கப்படும்.

19 ஆக., 2026PR #555

தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக இந்த ஆண்டிற்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன என சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.