TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
கல்வி

கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்.

படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், காளாஞ்சிபட்டி கிராமத்தில் இயங்கிவரும், கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில் 200 ஆர்வலர்களுக்கு கட்டணமில்லாப் பயிற்சி வழங்கப்படுகிறது.

விரிவான சுருக்கம்

கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல். படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழ்நாடு அரசின் கீழ் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், காளாஞ்சிபட்டி கிராமத்தில் இயங்கிவரும், கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில் 200 ஆர்வலர்களுக்கு கட்டணமில்லாப் பயிற்சி வழங்கப்படுகிறது. மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் ஆறு மாதம் முழுநேர பயிற்சியாக நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி, போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை. பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய இணையதளம் (www.cecc.in) வாயிலாக 16.05.2026 முதல் 24.05.2026 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04553 – 291269 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு, தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும், ஜூன் 2026 முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    200 ஆர்வலர்களுக்கு கட்டணமில்லாப் பயிற்சி
  • 2
    TNPSC, SSC, IBPS, RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி
  • 3
    மே 16, 2026 முதல் மே 24, 2026 வரை இணையவழி விண்ணப்பங்கள்
  • 4
    பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்ற தகுதி
  • 5
    ஆறு மாதம் முழுநேர பயிற்சி
  • 6
    உணவும் தங்கும் வசதிகள் இல்லை
  • 7
    பத்தாம் வகுப்பு மதிப்பெண் மற்றும் இனவாரியான இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு
  • 8
    ஜூன் 2026 முதல் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்