TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
ஆட்சி நிர்வாகம்வளர்ச்சித் திட்டங்கள்மக்கள் நல்வாழ்வு

தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் - மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு என்.ஆனந்த் அறிவுறுத்தல்கள்

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு என்.ஆனந்த், தியாகராய நகர் சட்டமன்ற தொகுதி வளர்ச்சி பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினருமான திரு என்.ஆனந்த் அவர்கள் இன்று (26.05.2026) சென்னை தலைமை செயலகத்தில், தியாகராய நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவல்துறை, மின்சாரத்துறை, சென்னை மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் அனைத்து துறை அலுவலர்களையும் அழைத்து தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்தும், தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல், தெருவிளக்குகள், பெண்களின் பாதுகாப்பு, போதை வஸ்துக்கள் ஒழிப்பு, டாஸ்மாக் கடைகள் நேரம், பள்ளிக்கூடங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள் கண்காணிப்பு, போக்குவரத்து சீரமைப்பு, அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி, மின்சாரம், தண்ணீர், மருத்துவம் தங்குதடையின்றி கிடைப்பது, மற்றும் தெரு நாய்கள் பிரச்சனை கட்டுப்பாடு போன்ற பல்வேறு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்த வித பாதிப்பும் வரக்கூடாது.
  • 2
    சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும்.
  • 3
    தொகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
  • 4
    தொகுதி முழுவதும் இரவு நேரங்களிலும் வெளிச்சம் உள்ள வகையில் தெரு விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்.
  • 5
    இருள் இல்லாத பகுதியாக தியாகராய நகர் பகுதி முழுவதும் இருக்க வேண்டும்.
  • 6
    பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், குறிப்பாக பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • 7
    கஞ்சா போன்ற போதை வஸ்துக்களின் நடவடிக்கைகள் தொகுதியில் எங்குமே இருக்கக் கூடாது.
  • 8
    டாஸ்மாக் கடைகள் சரியான நேரத்தில் மூடப்பட வேண்டும்.
  • 9
    பள்ளிக்கூடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும்.
  • 10
    போக்குவரத்து நெரிசல் இல்லாமல் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.
  • 11
    மக்களின் அத்தியாவசிய தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்.
  • 12
    மின்சாரம், தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அனைத்து பிரச்சனையும் இல்லாமல் பொதுமக்களுக்கு கிடைத்திட வேண்டும்.
  • 13
    தெரு நாய்கள் பிரச்சனை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Related Announcements & Press Releases