TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

துறை வாரியான அறிவிப்புகள்

நீர்வளத்துறை

அணைகளின் நீர்மட்டம் (மேட்டூர் அணை), கால்வாய் தூர்வாருதல், பாசன நீர் திறப்பு மற்றும் நீர்நிலை பாதுகாப்பு.

23 அக்., 2026PR #908

பேச்சிப்பாறை அணைக்கு வழங்கப்பட்ட உலக பாரம்பரிய பாசனக் கட்டமைப்பு விருதை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் அவர்களிடம்காண்பித்து வாழ்த்து பெற்றனர்

பேச்சிப்பாறை அணைக்கு வழங்கப்பட்ட 2026-ஆம் ஆண்டிற்கான உலக பாரம்பரிய பாசனக் கட்டமைப்பு விருது மற்றும் சான்றிதழ்கள் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் அவர்களிடம் காண்பிக்கப்பட்டு வாழ்த்து பெறப்பட்டது.

14 அக்., 2026PR #841

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஒக்கியம் மடுவுவை நேரில் பார்வையிட்டு, தென் சென்னை வெள்ளத்தடுப்பு முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (14.10.2026) சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், காரப்பாக்கத்தில் உள்ள ஒக்கியம் மடுவுவை நேரில் பார்வையிட்டு, வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் பகுதிகளில் நீர்வளத் துறையால் மேற்கொள்ளப்பட்டுவரும் வெள்ளத் தடுப்பு முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார்.

21 ஆக., 2026PR #562

மோர்தானா அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு

வேலூர் மாவட்டம் மற்றும் குடியாத்தம் வட்டத்திலுள்ள 8366.70 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெறும் வகையில், மோர்தானா அணையிலிருந்து 24.08.2026 முதல் 01.09.2026 வரை 9 நாட்களுக்கு மொத்தம் 174.96 மில்லியன் கனஅடிக்கு தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

7 ஆக., 2026PR #512

தமிழ்நாடு அரசு பெரியாறு அணையிலிருந்து தேனி மற்றும் மதுரை மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக தண்ணீர் திறந்து விட உத்தரவு

முதலமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு பெரியாறு அணையிலிருந்து 08.08.2026 முதல் 120 நாட்களுக்கு 350 கனஅடி தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளது. இது கம்பம் பள்ளத்தாக்கில் (தேனி மாவட்டம்) 14,707 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியையும், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களுக்கு குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும்.

29 ஜூலை, 2026PR #463

நீர்வளத்துறையில் நடைபெறும் பணிகள், 2026-2027 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு மற்றும் சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்புகள் குறித்த ஆய்வு கூட்டமானது நடைபெற்றது.

மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் இன்று (29.07.2026) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நீர்வளத்துறையில் நடைபெறும் பணிகள், 2026-2027 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்க குறிப்பு மற்றும் சட்டப்பேரவை மானிய கோரிக்கை அறிவிப்புகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

28 ஜூலை, 2026PR #455

தென்காசி மாவட்டம் அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தென்காசி மாவட்டம் அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து 29.07.2026 முதல் 31.10.2026 வரை 95 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் 2147.47 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

28 ஜூலை, 2026PR #453

அடையாறு ஆறு மற்றும் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரும் பணி: மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவுப்படி அமைச்சர் திரு.என்.ஆனந்த் தொடங்கி வைத்து ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் சென்னை மாவட்டம், ஆலந்தூர் வட்டம், மணப்பாக்கம் கிராமம் அடையாறு ஆற்றுப்பகுதியினை தூர்வாரி சீரமைக்கும் பணி மற்றும் சோழிங்கநல்லூர் வட்டம், தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் தூர்வாரி சீரமைக்கும் பணியை தொடங்கி வைத்து களப்பணியை ஆய்வு செய்தார்.

27 ஜூலை, 2026PR #446

சென்னை மாவட்டத்தில் கூவம் ஆறு மற்றும் ஒக்கியம் மடு தூர்வாரும் பணியை அமைச்சர் என். ஆனந்த் தொடங்கி வைத்தார்

முதலமைச்சரின் உத்தரவுப்படி, சென்னை மாவட்டத்தில் பாடிக்குப்பம் அருகே கூவம் ஆறு மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் அருகே ஒக்கியம் மடு தூர்வாரும் பணியை அமைச்சர் என். ஆனந்த் தொடங்கி வைத்தார். இது நீர் ஓட்டத்தை மேம்படுத்தி வெள்ளத்தைத் தடுக்கும் நோக்கம் கொண்டது.

25 ஜூலை, 2026PR #444

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை 27.07.2026 அன்று கள ஆய்வு செய்து தொடங்கி வைக்கிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் (27.07.2026) திங்கட்கிழமை அன்று கள ஆய்வு செய்து தொடங்கி வைக்கவுள்ளார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு ஆய்வில் மொத்தம் ஆறு முக்கிய இடங்களில் நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்படவுள்ளன.

24 ஜூலை, 2026PR #440

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் சூளகிரி வட்டங்களில் புன்செய் பயிர் பாசனத்திற்காக கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது, இதன் மூலம் 8000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும்.

20 ஜூலை, 2026PR #430

குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணை

மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின்படி, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் நிலவும் கடுமையான குடிநீர் பற்றாக்குறையைப் போக்க, நல்லாற்றிலிருந்து பாலாறு வழியாக ஐந்து நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

20 ஜூலை, 2026PR #429

தமிழ்நாடு அரசு அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவு

தமிழ்நாடு அரசு, முதலமைச்சரின் உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7520 ஏக்கர் பாசன நிலங்களுக்காக, அமராவதி அணையிலிருந்து 2026-2027 ஆம் ஆண்டு முதல் போக சாகுபடிக்கு, 21.07.2026 முதல் 03.12.2026 வரை 2073.60 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.