தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்
முதலமைச்சர் உத்தரவின்படி, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துதல், வருவாயை உயர்த்துதல் மற்றும் பேருந்துகளை நவீனமயமாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், இன்று (27–05–2026) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை செயலாளர் முனைவர் மா. வள்ளலார், இ.ஆ.ப., மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு. டாக்டர் டி. பிரபுசங்கர், இ.ஆ.ப., அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு. ஆர். மோகன், தனி அலுவலர் திரு. க. செல்வன் மற்றும் போக்குவரத்துத் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் பெரிதும் சார்ந்துள்ள பொதுப் போக்குவரத்தினை நிறைவாக அளித்திட வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். போக்குவரத்துத் துறைச் செயலாளர் துறையின் செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். அரசு போக்குவரத்துக் கழகங்களில் வருவாயை உயர்த்த அனைத்து வழிவகைகளையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவும், நிழற்குடை இல்லாத இடங்களில் நகராட்சி/உள்ளாட்சித் துறை மூலம் நிழற்குடை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. தகவல் தொழில்நுட்பத்தை முழுவதுமாகப் பயன்படுத்தி துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், பயணிகளுக்கு நிகழ்நேரத் தகவல்களை வழங்கவும், பேருந்துகளை நவீனமயமாக்கவும் ஆலோசிக்கப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து இயக்கங்களை சிரமமின்றி மேற்கொள்ளவும், பேருந்துகள் நிற்கும் உணவகங்களில் உணவின் தரத்தை உறுதிபடுத்தவும், பயணிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. பேருந்து வசதி இல்லாத கிராமங்களை கண்டறிந்து விரைவாகப் போக்குவரத்து வசதியை அப்பொது மக்கள் பயன்பெறும் வகையில் ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
முக்கிய அறிவிப்புகள்
- 1தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
- 2பொதுமக்கள் பெரிதும் சார்ந்துள்ள பொதுப் போக்குவரத்தினை நிறைவாக அளித்திட வேண்டும்.
- 3அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வருவாயை உயர்த்த அனைத்து வழிவகைகளையும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- 4பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவும், நிழற்குடை இல்லாத இடங்களில் நகராட்சி/உள்ளாட்சித் துறை மூலம் நிழற்குடை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- 5தகவல் தொழில்நுட்பத்தை முழுவதுமாகப் பயன்படுத்தி போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தி பயணிகளுக்கு நிகழ்நேர அடிப்படையில் தகவல்களை வழங்க வேண்டும்.
- 6பேருந்துகளை நவீனமயமாக்க வேண்டும்.
- 7கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் பேருந்து இயக்கங்களை மக்கள் சிரமம் இல்லாமல் பயன்படுத்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
- 8பேருந்துகள் நிற்கும் உணவகங்களில் உணவின் தரத்தை உறுதிபடுத்த வேண்டும்.
- 9பயணிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
- 10பேருந்து வசதியே இல்லாத கிராமங்களை கண்டறிந்து, மிக விரைவாகப் போக்குவரத்து வசதியை அப்பொது மக்கள் பயன்பெறும் வகையில் ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.