தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்திற்கென புதிய இணையதளம் தொடக்கம்
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஜா.முகமது பர்வேஸ் அவர்களால் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்திற்கென முதல் முறையாக பிரத்தியோக இணையதளம் (https://tils.tn.gov.in/) தொடங்கப்பட்டது.
விரிவான சுருக்கம்
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் 1973-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1988-லிருந்து சங்கமாக செயல்பட்டு வருகிறது. இக்கல்வி நிலையத்தின் ஆட்சிமன்றக் குழுவின் தலைவராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் செயல்படுகிறார். இக்கல்வி நிலையம் தொழிலாளர் மேலாண்மையில் பி.ஏ. (இளங்கலை பட்டப்படிப்பு) மற்றும் எம்.ஏ (முதுகலை பட்டப்படிப்பு), 2001 முதல் முழுநேர மற்றும் பகுதி நேர ஆராய்ச்சி (பி.எச்.டி) படிப்பு, முதுகலை பட்டயப்படிப்பு (பி.ஜி.டி.எல்.ஏ) மற்றும் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிர்வாகவியல் பட்டயப் படிப்புகளை நடத்தி வருகிறது. மாணவர்களும் பொதுமக்களும் இக்கல்வி நிலையத்தால் நடத்தப்படும் படிப்புகள், பயிற்சி வகுப்புகள், ஆராய்ச்சி செயல்பாடுகள், சேர்க்கை தொடர்பான தகவல்கள், அறிவிப்புகள் மற்றும் பிற கல்வி நிலைய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்புகள்
- 1தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்திற்கென முதல் முறையாக பிரத்தியோக இணையதளம் (https://tils.tn.gov.in/) தொடங்கப்பட்டது.
- 2இந்த இணையதளம் மாணவர்களும் பொதுமக்களும் இக்கல்வி நிலையத்தால் நடத்தப்படும் படிப்புகள், பயிற்சி வகுப்புகள், ஆராய்ச்சி செயல்பாடுகள், சேர்க்கை தொடர்பான தகவல்கள், அறிவிப்புகள் மற்றும் பிற கல்வி நிலைய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.