குறிச்சொல் செய்திகள்
#Digital Initiative
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Digital Initiative குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
17 ஆக., 2026PR #548
தமிழ்நாட்டில் மனைப்பிரிவு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனை ஆவணங்களுக்கு வருகையில்லா இணையவழி பதிவு கட்டாயமாக்கலை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், தமிழ்நாட்டில் மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை ஆவணங்களுக்கு வருகையில்லா இணையவழி பதிவு (Presenceless Registration) முறையை கட்டாயமாக்கி தொடங்கி வைத்தார். இது பதிவு நடைமுறைகளை எளிதாக்கி, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும்.
3 ஜூன், 2026PR #161
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்திற்கென புதிய இணையதளம் தொடக்கம்
மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஜா.முகமது பர்வேஸ் அவர்களால் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்திற்கென முதல் முறையாக பிரத்தியோக இணையதளம் (https://tils.tn.gov.in/) தொடங்கப்பட்டது.