TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
அமைச்சர் தலைமையிலான கூட்டம்

மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்களின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம்

மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள், 05.06.2026 அன்று, நடப்பு 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, புதிய திட்டங்களை உருவாக்குவது குறித்து விவாதித்தார்.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் சிறப்பான ஆட்சியின் கீழ், மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர.வினோத் அவர்கள், 05.06.2026 அன்று, நடப்பு 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்களுடனும், வேளாண்மை இயக்குநரக அனைத்து தொழில்நுட்ப அலுவலர்களுடனும், அமைச்சுப் பணியாளர்களுடனும் ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வில், வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் மற்றும் அதற்கு உண்டான நிதி ஒதுக்கீட்டு விவரங்கள், மாநில அரசின் சிறப்பு திட்ட செயல்பாடுகள், சாகுபடிப் பரப்பை உயர்த்தத் தேவையான வழிமுறைகள், தடையில்லா இடுபொருட்கள் விநியோகம், இடுபொருட்கள் தரம், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தேவையான வழிமுறைகள், வேளாண்மை துறை சார்ந்த உட்கட்டமைப்பு விவரங்கள் தணிக்கை பத்தி விவரங்கள் மற்றும் நீதிமன்ற வழக்கு விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், இவ்வரசானது, விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வருமானம் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை தொடர்ந்து அத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து எதிர்வரும் சட்டமன்ற நிதிநிலை கூட்டத் தொடரில் அறிவிக்க ஏதுவாக புதிய திட்டங்களை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சர் அறிவுரைகளை வழங்கினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் முனைவர் திரு. பொ. சங்கர், இ.ஆ.ப., மற்றும் வேளாண்மை இயக்குநர் முனைவர் திரு. க.வீ. முரளீதரன், இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு.
  • 2
    மத்திய, மாநில அரசுத் திட்டங்கள், நிதி ஒதுக்கீட்டு விவரங்கள், மாநில அரசின் சிறப்பு திட்ட செயல்பாடுகள் மற்றும் சாகுபடிப் பரப்பை உயர்த்தத் தேவையான வழிமுறைகள் குறித்து விவாதம்.
  • 3
    தடையில்லா இடுபொருட்கள் விநியோகம், இடுபொருட்கள் தரம், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தேவையான வழிமுறைகள், உட்கட்டமைப்பு தணிக்கை மற்றும் நீதிமன்ற வழக்குகள் குறித்து ஆய்வு.
  • 4
    விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்திட, தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை, எதிர்வரும் சட்டமன்ற நிதிநிலை கூட்டத் தொடரில் அறிவிக்க ஏதுவாக, புதிய திட்டங்களை உருவாக்க அறிவுறுத்தல்.

Related Announcements & Press Releases