TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
விளையாட்டு

நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு உயரிய ஊக்கத்தொகை ரூ.50 இலட்சத்திற்கான காசோலை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையான 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் உயரிய ஊக்கத் தொகையான 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அப்போது, கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா அவர்கள் நார்வே செஸ் 2026 தொடரில் வெற்றி பெற்றதற்காக வழங்கப்பட்ட கோப்பையைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார். விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக உருவாக்கிடும் வகையில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், பதக்கங்களை வெல்பவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில், கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (ELITE) கீழ் ஆண்டுதோறும் 30 இலட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டுவருகிறது. அதனைச் செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் 'ஹோம் ஆஃப் செஸ்' என்ற தனிப்பட்ட சதுரங்க அகாடமி நிறுவப்பட்டுள்ளது. இந்த அகாடமியின் மூலம் முறைப்படி பயிற்சி முகாம்களை நடத்துதல், வீரர்களின் செயல்திறனைக் கண்காணித்தல், சர்வதேச அளவிலான அனுபவத்தை வழங்குதல், நவீன கருவிகள் மற்றும் ஒத்திகை மென்பொருள்களின் மூலம் மேம்பட்ட பயிற்சி அளித்தல், மனவளப்பயிற்சி, முறையான திட்டமிடல் மற்றும் வீரர்களின் முழுமையான அறிவுத்திறன் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது. இந்த முயற்சி அனைத்து வயதினரையும், குறிப்பாக இளம் வீரர்களை ஊக்குவித்து, சர்வதேச மாஸ்டர் (IM) மற்றும் கிராண்ட்மாஸ்டர் (GM) போன்ற உயரிய சதுரங்கப் பட்டங்களைப் பெற வழிவகை செய்வதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு. ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவின் பெற்றோர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.50 இலட்சத்திற்கான உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
  • 2
    கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (ELITE) கீழ் ஆண்டுதோறும் ரூ.30 இலட்சம் உதவித்தொகையாக வழங்கப்பட்டுவருகிறது.
  • 3
    விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக உருவாக்கிடும் வகையில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், பதக்கங்களை வெல்பவர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.
  • 4
    சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் 'ஹோம் ஆஃப் செஸ்' என்ற தனிப்பட்ட சதுரங்க அகாடமி நிறுவப்பட்டுள்ளது. இது முறைப்படி பயிற்சி முகாம்களை நடத்துதல், வீரர்களின் செயல்திறனைக் கண்காணித்தல், சர்வதேச அனுபவத்தை வழங்குதல், நவீன கருவிகள் மற்றும் ஒத்திகை மென்பொருள்களின் மூலம் மேம்பட்ட பயிற்சி அளித்தல், மனவளப்பயிற்சி, முறையான திட்டமிடல் மற்றும் வீரர்களின் முழுமையான அறிவுத்திறன் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்து சர்வதேச மாஸ்டர் மற்றும் கிராண்ட்மாஸ்டர் போன்ற உயரிய சதுரங்கப் பட்டங்களைப் பெற வழிவகை செய்யும்.

Related Announcements & Press Releases