TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
கல்வி மற்றும் பயிற்சி

மாண்புமிகு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் அவர்கள் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மைய முதன்மை தேர்வுப் பயிற்சிக்கான துவக்க நிகழ்வில் கலந்துரையாடல்.

மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் அவர்கள் தலைமையில் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணைய முதன்மைத் தேர்வுப் பயிற்சிக்கான துவக்க நிகழ்வு நடைபெற்றது.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (22.06.2026) பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் சென்னை அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.த.சரத்குமார் அவர்கள் தலைமையில் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணைய முதன்மைத் தேர்வுப் பயிற்சிக்கான துவக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முதன்மைத் தேர்வுப் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்ட ஆர்வலர்களுடன் கலந்துரையாடினார். அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று, குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 81 ஆர்வலர்களை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பாராட்டினார். பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் ஆர்வலர்களுக்கு பயனுள்ளதாக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும், மேலும் அண்ணா நகரில் கட்டப்பட இருக்கும் பயிற்சி மையத்தில் வருங்காலத்தில் அதிகளவில் ஆர்வலர்கள் சேர்க்கப்படுவர் என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக அளவில் குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்று, இந்திய அளவில் உயர்ந்த ஆட்சிப் பொறுப்புகளை வகிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு அதற்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த கலந்துரையாடல் நிகழ்வின் போது மனிதவள மேலாண்மைத் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரி, இயக்குநர்/பயிற்சித் துறைத் தலைவர் திரு.ச.கோபால சுந்தரராஜ், இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர் (போட்டித்தேர்வுகள்) முனைவர்.தே.சங்கர சரவணன், பயிற்சி மைய முதல்வர் திருமதி.கா.காயத்திரி சுப்பிரமணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மைய முதன்மை தேர்வுப் பயிற்சிக்கான துவக்க நிகழ்வு நடைபெற்றது.
  • 2
    குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 81 ஆர்வலர்கள் பாராட்டப்பட்டனர்.
  • 3
    அண்ணா நகரில் புதிய பயிற்சி மையம் கட்டப்படும், வருங்காலத்தில் அதிகளவில் ஆர்வலர்கள் சேர்க்கப்படுவர்.
  • 4
    பயிற்சி மையத்தின் செயல்பாடுகள் ஆர்வலர்களுக்கு பயனுள்ளதாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்