TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
வீட்டு வசதி மேம்பாடு

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் திட்டப்பகுதிகளில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த - மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ப.ராஜ்குமார் அவர்கள் விரைவில் முடிக்க உத்தரவு

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப.ராஜ்குமார் அவர்கள் சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் திட்டப்பகுதிகளில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்து, அவற்றை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப.ராஜ்குமார் மற்றும் உயர்திரு. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவர் திரு. கு ப கிருஷ்ணன் ஆகியோர் 01.07.2026 அன்று சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகிநகர் மற்றும் எழில் நகர் திட்டப்பகுதிகளில் நடைபெற்றுவரும் அடுக்குமாடி குடியிருப்புகளின் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அமைச்சர் திரு.ப.ராஜ்குமார் தெரிவித்ததாவது: சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகிநகர் திட்டப்பகுதியில் மொத்தமுள்ள 15,656 குடியிருப்புகளில் ரூ.40 கோடி மதிப்பில் 9152 குடியிருப்புகளின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மீதமுள்ள 6504 குடியிருப்புகள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எழில் நகர் திட்டப்பகுதியில் மொத்தமுள்ள 6000 குடியிருப்புகளில், 3232 குடியிருப்புகளுக்கான புனரமைப்பு பணிகள் ரூ.40 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எழில் நகர் சுனாமி குடியிருப்பு திட்டப்பகுதியில் மொத்தமுள்ள 2048 குடியிருப்புகளில், 1152 குடியிருப்புகளுக்கான புனரமைப்பு பணிகள் ரூ.8.19 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மூன்று திட்டப்பகுதிகளிலும் மொத்தமாக 23,704 அடுக்குமாடி குடியிருப்புகள் 188.59 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளன. புனரமைப்பு பணிகள் உரிய காலத்தில் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.சரவணன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் திருமதி பெ. ரமண சரஸ்வதி இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குநர் செல்வி அனாமிகா ரமேஷ் இ.ஆ.ப., வாரியத் தலைமைப் பொறியாளர் திரு.ச.மணிவண்ணன் மற்றும் வாரிய அலுவலர்கள் உடனிருந்தனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் திட்டப்பகுதிகளில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
  • 2
    புனரமைப்பு பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிடப்பட்டது.
  • 3
    கண்ணகி நகர், எழில் நகர் மற்றும் எழில் நகர் சுனாமி குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட உள்ள புனரமைப்பு பணிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டன.

Related Announcements & Press Releases