TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Inspection

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Inspection குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

5 செப்., 2026PR #623

தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை சென்னையில் ஆய்வு

தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., அவர்கள், சென்னை மாநகராட்சியின் அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள், ஏரி மற்றும் கால்வாயில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி உள்ளிட்ட பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செப்டம்பர் மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.

28 ஆக., 2026PR #596

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் M-3 புழல் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.8.2026) சென்னை, புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று, சிறைவாசிகளுக்கான அடிப்படை வசதிகள், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, மருத்துவ வசதிகள், சிறைவாசிகளுக்கான தொழிற்கூடம் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, சிறைவாசிகளிடம் அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, M-3 புழல் காவல் நிலையத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று, காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து காவல் ஆய்வாளரிடம் கேட்டறிந்து, பதிவேடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

14 ஆக., 2026PR #542

அமைச்சர் ப.வெங்கடரமணன் சென்னை அமுதம் பல்பொருள் அங்காடியில் திடீர் ஆய்வு

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், சென்னை ராமாபுரம் - மணப்பாக்கம் பகுதியில் உள்ள அமுதம் பல்பொருள் அங்காடியில் இருப்பு, தரம், பராமரிப்பு மற்றும் விநியோக நடைமுறைகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொருட்கள் உரிய எடையிலும், தரமாகவும் வழங்கப்படுவதையும், விற்பனை ரசீது கட்டாயம் வழங்கப்படுவதையும் உறுதி செய்ய அறிவுறுத்தினார்.

13 ஆக., 2026PR #531

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சென்னையில் நியாய விலைக் கடையில் ஆய்வு

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள், சென்னை, கண்ணம்மாப்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை ஆய்வு செய்து, தரமான சேவை வழங்கவும், பொதுமக்கள் குறைகளைத் தீர்க்கவும் அறிவுறுத்தினார்.

3 ஆக., 2026PR #488

காஞ்சிபுரம் மாவட்ட சிப்காட் தொழிற்பூங்கா வளாகங்களில் அமைந்துள்ள செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்தையும், ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலையையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (3.8.2026) காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கும் நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார். மேலும், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா திட்ட அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

29 ஜூலை, 2026PR #462

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை மெட்ரோ இரயில் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-I மற்றும் கட்டம்-II பணிகள், செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் எதிர்கால விரிவாக்கத் திட்டங்களை ஆய்வு செய்தார். அவர் முக்கிய கட்டுமானப் பகுதிகள் மற்றும் இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தைப் பார்வையிட்டார்.

25 ஜூலை, 2026PR #444

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை 27.07.2026 அன்று கள ஆய்வு செய்து தொடங்கி வைக்கிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் (27.07.2026) திங்கட்கிழமை அன்று கள ஆய்வு செய்து தொடங்கி வைக்கவுள்ளார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு ஆய்வில் மொத்தம் ஆறு முக்கிய இடங்களில் நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்படவுள்ளன.

13 ஜூலை, 2026PR #387

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் ஆய்வு

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி நொச்சிக்குப்பம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் பள்ளி வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

13 ஜூலை, 2026PR #386

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திருமதி S. கமலி அவர்கள் ஆய்வு

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திருமதி S. கமலி அவர்கள் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, வசதிகளை பார்வையிட்டு, அலுவலர்களுடன் கலந்துரையாடினார். ஒரு குதிரை இறந்ததற்கான காரணம், கழிவு மேலாண்மை மற்றும் சிகிச்சை செலவுகள் குறித்து விசாரித்தார்.

3 ஜூலை, 2026PR #334

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக புனரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக புனரமைப்புப் பணிகள், புகார் தீர்வு நடைமுறைகள் மற்றும் கிடங்குகள், அரிசி ஆலைகளில் CCTV கண்காணிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

2 ஜூலை, 2026PR #327

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் திட்டப்பகுதிகளில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்த - மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ப.ராஜ்குமார் அவர்கள் விரைவில் முடிக்க உத்தரவு

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப.ராஜ்குமார் அவர்கள் சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் திட்டப்பகுதிகளில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்து, அவற்றை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.

30 ஜூன், 2026PR #311

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சென்னை அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு

மாண்புமிகு அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் சென்னை அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, உணவுத் தரம், சுகாதாரம் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஆய்வு செய்து, வாடிக்கையாளர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.