TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
சுற்றுலா, அரசு ஆய்வு

மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. செ. ராஜேஷ் குமார் அவர்களின் தலைமையில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. செ. ராஜேஷ் குமார் தலைமையில், சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, ஆன்லைன் டிக்கெட் போன்ற மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், பல்வேறு சுற்றுலா சேவைகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மாவட்டங்கள்சென்னை
முக்கிய நபர்கள்S. Rajes Kumar, S. Swarna

விரிவான சுருக்கம்

இன்று 07.07.2026 அன்று சென்னை, வாலாஜா சாலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. செ. ராஜேஷ் குமார் அவர்களின் தலைமையில், அனைத்து மாவட்ட சுற்றுலா அலுவலர்களின் பணிகள் மற்றும் மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கட்டடப் பணிகள், பராமரிப்பு, அழகுபடுத்தும் பணிகள், அனைத்து சுற்றுலாத் தளங்களிலும் ஆன்லைன் டிக்கெட் வசதிகள் ஏற்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்துதல் உள்ளிட்ட சுற்றுலா மேம்பாட்டுத் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். மேலும், மாவட்ட ஆட்சியர்களின் ஆலோசனை மற்றும் உதவியுடன் இத்திட்டங்களை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதேபோல், இன்று மாலை நடைபெற்ற தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில், ஓட்டல் தமிழ்நாடு, அமுதகம் உணவகம், சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் நடத்தப்படும் 15 படகு குழாம்கள், ஆலயம் தங்கும் விடுதிகள், 15 சொகுசுப் பேருந்துகள், தமிழ்நாடு முழுவதும் தற்போது இயக்கப்படும் 64 சுற்றுப்பயணத் தொகுப்புகள், 8 குயிக் பைட்ஸ் விற்பனை நிலையங்களின் தற்போதைய பணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் வகையிலான திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அனைத்து தங்கும் விடுதிகளிலும் வார நாட்கள்/விடுமுறை நாட்களில் Dynamic Pricing கட்டண முறையைத் தொடர்ந்து செயல்படுத்தவும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஓட்டல் தமிழ்நாடு உணவகங்களில் மே மாதம் முதல் 'உணவுத் திருவிழா'வை சிறப்பாக நடத்திடவும், பிரியாணி ரூ.99/-க்கும், அசைவ விருந்து ரூ.499/-க்கும் வார இறுதி நாட்களில் வழங்கிடவும் வழிவகை செய்யுமாறு அறிவுறுத்தினார். சுற்றுலாத் துறையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும், அரசுக்கு நல்ல பெயர் பெற்றுத் தரவும் அனைத்து நிலை அலுவலர்களும் ஒற்றுமையுடன் பணிபுரியுமாறு மாண்புமிகு அமைச்சர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் சீ. ஸ்வர்ணா, இ.ஆ.ப., சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ.ஆ.ப., சுற்றுலாத்துறை இணை இயக்குநர் திருமதி அ. சிவப்ரியா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் திருமதி சி. லட்சுமி பிரியா, மற்றும் சுற்றுலாத்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள், அடிப்படை வசதிகள், கட்டடப் பணிகள், பராமரிப்பு மற்றும் அழகுபடுத்தும் பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.
  • 2
    அனைத்து சுற்றுலா தளங்களிலும் ஆன்லைன் டிக்கெட் வசதிகள் மற்றும் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிட்டார்.
  • 3
    மாவட்ட ஆட்சியர்களின் ஆலோசனை மற்றும் உதவியுடன் திட்டங்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
  • 4
    ஓட்டல் தமிழ்நாடு, அமுதகம் உணவகம், படகு குழாம்கள், தங்கும் விடுதிகள், சொகுசுப் பேருந்துகள், சுற்றுப்பயண தொகுப்புகள் மற்றும் குயிக் பைட்ஸ் விற்பனை நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தார்.
  • 5
    விடுதிகள் மற்றும் தங்கும் விடுதிகளில் வார நாட்கள்/விடுமுறை நாட்களில் Dynamic Pricing கட்டண முறையை அமல்படுத்த உத்தரவிட்டார்.
  • 6
    மே மாதம் முதல் 'உணவுத் திருவிழா'வை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டது.
  • 7
    தேர்ந்தெடுக்கப்பட்ட விடுதி உணவகங்களில் வார இறுதி நாட்களில் பிரியாணி ரூ.99/-க்கும், அசைவ விருந்து ரூ.499/-க்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்