#Tourism
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Tourism குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்-தமிழ்நாடு 2 நாட்கள் "பயணம் மற்றும் சுற்றுலா பயிற்சித் திட்டம்"
சென்னை, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), விரிவடைந்து வரும் பயணத் துறைக்குத் தேவையான அத்தியாவசிய திறன்களை வளர்க்க, ஆர்வமுள்ள வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோருக்காக அக்டோபர் 29-30, 2026 வரை 2 நாள் "பயணம் மற்றும் சுற்றுலா" பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்கிறது.
ரூ.10.25 கோடி செலவில் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்ட மதுரை, காந்தி நினைவு அருங்காட்சியகம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.9.2026) மதுரையில், 10 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் பாரம்பரியம் மாறாமல் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக இந்த ஆண்டிற்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன என சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. செ. ராஜேஷ் குமார் அவர்களின் தலைமையில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. செ. ராஜேஷ் குமார் தலைமையில், சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, ஆன்லைன் டிக்கெட் போன்ற மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், பல்வேறு சுற்றுலா சேவைகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. செ. ராஜேஷ் குமார் தலைமையில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டை தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சுற்றுலா இடமாக உயர்த்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.