TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
உட்கட்டமைப்பு மேம்பாடு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடீநீர் வழங்கல் துறை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்திரவின் பேரில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டம்

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான திருத்திய நிர்வாக அனுமதி ரூ.1035.61 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் M/S.SUEZ Project International Private Limited நிறுவனத்துடன் 19.06.2026 அன்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.

விரிவான சுருக்கம்

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான ஆரம்ப நிர்வாக அனுமதி அரசாணை எண். G.O. (MS.) No.39, நாள்: 06.03.2024-ன்படி ரூ.758.13 கோடிக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் வழங்கப்பட்டது. M/S.SUEZ Project International Private Limited நிறுவனத்திற்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டு, 09.02.2026 அன்று ஏற்பளிப்பு கடிதம் (LOA) வழங்கப்பட்டது. பின்னர், திருத்திய மதிப்பீட்டின்படி ரூ.1035.61 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அரசாணை எண். G.O. (4D) N0.16, நாள்: 04.06.2026 அன்று வெளியிடப்பட்டது. இத்தொகையில் ரூ.227.44 கோடி இந்திய அரசால் அம்ரூட்-2.0 திட்டத்தின் கீழும், ரூ.393.92 கோடி தமிழ்நாடு மாநில அரசால் பங்களிப்பு செய்யவும், மீதமுள்ள ரூ.414.25 கோடி தொகை ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் பங்களிப்பு செய்யவும் வகை செய்யப்பட்டுள்ளது. M/S.SUEZ Project International Private Limited நிறுவனத்திற்கும் சேலம் மாநகராட்சிக்கும் இடையே 19.06.2026 அன்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இத்திட்டம் முதல் வருடத்தில் தற்போதுள்ள குடிநீர் உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தும், அடுத்துள்ள நான்கு ஆண்டுகளில் புதிய வசதிகளை ஏற்படுத்திடவும் நிறைவேற்றப்படும். மேலும் 25 ஆண்டுகளுக்கு தொடர் பராமரிப்பு பணிகளும் ரூ.3259.73 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும், குடிநீர் விநியோகத்தினை திறன்மிக்க வகையில் கையாளவும், பொதுமக்களின் குறைகளை களையவும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    சேலம் மாநகராட்சியில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான திருத்திய நிர்வாக அனுமதி ரூ.1035.61 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 2
    இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் சேலம் மாநகராட்சிக்கும் M/S.SUEZ Project International Private Limited நிறுவனத்திற்கும் இடையே 19.06.2026 அன்று கையெழுத்தானது.
  • 3
    இத்திட்டம் முதல் வருடத்தில் குடிநீர் உட்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தும், அடுத்துள்ள நான்கு ஆண்டுகளில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  • 4
    தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த நிறுவனம் இத்திட்டத்தினை அடுத்த 25 ஆண்டுகளுக்கு ரூ.3259.73 கோடி மதிப்பீட்டில் தொடர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்