குறிச்சொல் செய்திகள்
#Tamil Nadu Electricity Grid Code
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Tamil Nadu Electricity Grid Code குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
30 ஜூன், 2026PR #312
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் நிகழ்நேர தரவுகளை (Real-Time) உடனுக்குடன் தமிழ்நாடு மின்வாரியத்துடன் பகிர்வது இனி கட்டாயம். தவறும்பட்சத்தில் மின்உற்பத்தி நிறுவனங்களின் மின் உற்பத்தியில் 10% மின் கணக்கீடு கழித்து கணக்கிடப்படும் - மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் தகவல்.
தமிழ்நாடு அரசு அனைத்து புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களையும், மாநில மின் சுமை பகிர்மான மையத்துடன் (SLDC) நிகழ்நேர தரவுகளை SCADA மூலம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பகிர வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது. தவறும்பட்சத்தில், தமிழ்நாடு மின்சார கட்டமைப்பு விதிமுறை 2026-இன் படி, மின் கணக்கீட்டில் குறைப்பு மற்றும் மின் அனுப்புகை செயல்முறைகளிலிருந்து விலக்கு போன்ற அபராதங்கள் விதிக்கப்படும்.