#Renewable Energy
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Renewable Energy குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சேத்துப்பட்டு உயிரி-எரிவாயு ஆலையை பார்வையிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் அறிவியல் பூர்வமான கழிவு மேலாண்மைக்கு உத்தரவுகள் பிறப்பித்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை சேத்துப்பட்டில் பொது-தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் உயிரி-எரிவாயு ஆலையை நேரில் பார்வையிட்டார். தினமும் உருவாகும் 6,150 மெட்ரிக் டன் குப்பைகளை தரம் பிரித்து, மக்கும் குப்பைகளை எரிவாயு மற்றும் உரமாக மாற்றவும், மக்காத குப்பைகளை சாலை அமைக்கவும், சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாகவும் பயன்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் கழிவு மேலாண்மையை அறிவியல் பூர்வமாக காலக்கெடுவுடன் செயல்படுத்தவும் அறிவுறுத்தினார்.
திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 15,037 கோடி ரூபாய் முதலீட்டில் 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems – BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 15,037 கோடி ரூபாய் முதலீட்டில் 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
உலகத் தரத்திலான நவீன தொழில்நுட்பத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB Ltd) – ஐஐடி, சென்னை (IIT Madras) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி. டி. ஆர். நிர்மல் குமார் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது.
இன்று (09.07.2026) சென்னையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி. டி. ஆர். நிர்மல் குமார் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாட்டின் மின்கட்டமைப்பை தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, மின் சேவைகளின் நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் தரத்தினை உயர்த்தும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB Ltd) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை (IIT Madras) ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் நிகழ்நேர தரவுகளை (Real-Time) உடனுக்குடன் தமிழ்நாடு மின்வாரியத்துடன் பகிர்வது இனி கட்டாயம். தவறும்பட்சத்தில் மின்உற்பத்தி நிறுவனங்களின் மின் உற்பத்தியில் 10% மின் கணக்கீடு கழித்து கணக்கிடப்படும் - மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் தகவல்.
தமிழ்நாடு அரசு அனைத்து புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களையும், மாநில மின் சுமை பகிர்மான மையத்துடன் (SLDC) நிகழ்நேர தரவுகளை SCADA மூலம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பகிர வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது. தவறும்பட்சத்தில், தமிழ்நாடு மின்சார கட்டமைப்பு விதிமுறை 2026-இன் படி, மின் கணக்கீட்டில் குறைப்பு மற்றும் மின் அனுப்புகை செயல்முறைகளிலிருந்து விலக்கு போன்ற அபராதங்கள் விதிக்கப்படும்.
தமிழ்நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் வெளிப்படையான நிர்வாக செயல்திறன் மற்றும் விரைவான சேவை வழங்கலை உறுதி செய்து, திட்டங்களை விரைவுபடுத்தி மாநிலத்தின் பசுமை ஆற்றல் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்திடும் வகையில் 5 புதிய மண்டலங்கள் உருவாக்கம்
மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் நிர்வாக செயல்திறன் மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்தி, பசுமை ஆற்றல் வளர்ச்சியை விரைவுபடுத்த 5 புதிய மண்டலங்களை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைத்திடவும், மின் பழுதுகளைச் சரிசெய்திடத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும், மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்து, மின் பணியாளர்களை ரோந்துப் பணியில் ஈடுபடுத்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்ற எரிசக்தித் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில் உத்தரவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்ற எரிசக்தித் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில், மின் கட்டமைப்பை வலுப்படுத்த புதிய துணை மின் நிலையங்கள் அமைத்தல், மின் பணியாளர்கள் நியமனம், மின் தளவாடங்கள் கொள்முதல் மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்துதல் குறித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.