TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
அரசு கூட்டம்; துறைசார் ஆய்வு

மாண்புமிகு அமைச்சர் திரு.என்.ஆனந்த் தலைமையில் நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம்

மாண்புமிகு அமைச்சர் திரு.என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்ற நீர்வளத்துறை ஆய்வுக் கூட்டத்தில், நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்கவும், மக்கள் நலன் பயக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், திட்டப்பணிகளில் மகளிரின் பங்களிப்பை அதிகரிக்கவும் வலியுறுத்தப்பட்டது.

விரிவான சுருக்கம்

இன்று 18.05.2026 அன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்களின் தலைமையில் நீர்வளத்துறையின் பொறியாளர்களுடன் ஒரு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நீர்வளத்துறையின் செயலாளர் துறையைப் பற்றியும், நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் விளக்கினார். தலைமைப் பொறியாளர்கள் தங்கள் மண்டலங்களில் நடைபெறும் முக்கிய பணிகள் குறித்து விளக்கமளித்தனர். அமைச்சர் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு அறிவுறுத்தினார். மேலும், மக்கள் நலன் பயக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, அதனைச் சார்ந்த தேவையான புதிய பணிகளைக் கண்டறிந்து முன்மொழியுமாறும் அறிவுறுத்தினார். துறையினால் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளில் மகளிரின் பங்களிப்பை உயர்த்துமாறும் அவர் வலியுறுத்தினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் நீர்வளத்துறையின் செயலாளர் திரு. ஜெ.ஜெயகாந்தன் இ.ஆ.ப., சிறப்பு செயலாளர் திரு.சு.ஸ்ரீதரன், முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது) திரு.சு.கோபாலகிருஷ்ணன், நீர்வளத்துறையின் அனைத்து தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தல்.
  • 2
    மக்கள் நலன் பயக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, தேவையான புதிய பணிகளை கண்டறிந்து முன்மொழிய அறிவுறுத்தல்.
  • 3
    துறையினால் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளில் மகளிரின் பங்களிப்பை உயர்த்துமாறு அறிவுறுத்தல்.

Related Announcements & Press Releases