TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
சுகாதாரம்மக்கள் நலன்உள்கட்டமைப்பு

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்ககத்தின் பயன்பாட்டிற்காக 40 புதிய வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சாவிகளை ஒட்டுநர்களுக்கு வழங்கி, வாகனத்தை இயக்கித் தொடங்கி வைத்தார்.

விரிவான சுருக்கம்

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்திற்கு வழங்கப்பட்டுள்ள இப்புதிய வாகனங்கள், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலுள்ள ஸ்கேன் மையங்களில் கருவுறுதலுக்கு முன், கருவுறுதலுக்கு பின் பாலின தேர்வு தடைச்சட்டம் 1994-ன்படியும் மற்றும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 1997-ன்படியும் சட்ட விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், முறையாக பதிவு பெறப்பட்டு இயக்கப்படுகிறதா என்பதை ஆய்வு மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படும். மேலும், பேரிடர் மற்றும் பெருந்தொற்றுக் காலங்களில் மக்களுக்குத் தேவையான மருத்துவப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்குத் தேவையான உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், போலி மருத்துவர் மீது விரைந்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் இப்புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்திற்காக 2.90 கோடி ரூபாய் மதிப்பிலான 40 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டன.
  • 2
    இந்த வாகனங்கள் கருவுறுதலுக்கு முன் மற்றும் கருவுறுதலுக்கு பின் பாலின தேர்வு தடைச்சட்டம் 1994 மற்றும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 1997 ஆகியவற்றை ஸ்கேன் மையங்களில் கண்காணிக்கும் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.
  • 3
    பேரிடர் மற்றும் பெருந்தொற்றுக் காலங்களில் மருத்துவப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளவும், சிகிச்சை தரத்தை கண்காணிக்கவும், போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வாகனங்கள் பயன்படும்.

Related Announcements & Press Releases

Chief Minister Thiru. S. Joseph Vijay launches 40 new vehicles for the Directorate of Medical and Rural Health Services | TN SHORTS