TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
கல்வி, நலத்திட்டம், அரசுத் திட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர NEET, JEE போன்ற நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மூலம் பயன்பெற அழைப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர NEET, JEE போன்ற நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் 2023 முதல் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து செலவுகளையும் அரசு ஏற்கிறது.

விரிவான சுருக்கம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் 98 ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 36 பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளிகளில் +2 பயிலும் மாணாக்கர்களுக்கு NEET, JEE, CUET, CLAT, CIPET மற்றும் NIFT போன்ற 19 வகையான உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, உயர்கல்வி நிறுவனங்களில் சேர சிறப்பு பயிற்சி வகுப்புகள் 2023-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு சீரிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணம் மற்றும் பயிற்சி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களும் இத்துறை மூலம் ஏற்கப்படுகிறது. கடந்த 2023-2025-ஆம் ஆண்டுகளில் 199 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் ஒன்றிய அரசின் உயர்கல்வி சிறப்பு நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சேர்ந்துள்ளனர். 2025-2026-ஆம் நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்காக உயர்கல்வி நிறுவனங்களில் சேர அனைத்து உயர்கல்வி சிறப்பு பயிற்சி வகுப்புகள் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, துவாக்குடி, மாதிரி பள்ளி, திருச்சி, EMRS அபிநவம் பள்ளி, சேலம் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, மல்லூர் EMRS குமிழி, செங்கல்பட்டு, மாதிரி பள்ளி, கடலூர் ஆகிய இடங்களில் அனைத்து வார இறுதி நாட்களில் ஆன்லைன் மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர NEET, JEE போன்ற நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மூலம் பயன்பெற அழைப்பு
  • 2
    NEET, JEE, CUET, CLAT, CIPET மற்றும் NIFT போன்ற 19 வகையான உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற சிறப்பு பயிற்சி வகுப்புகள் 2023-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு சீரிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
  • 3
    இத்தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணம் மற்றும் பயிற்சி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களும் இத்துறை மூலம் ஏற்கப்படுகிறது.
  • 4
    கடந்த 2023-2025-ஆம் ஆண்டுகளில் 199 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் ஒன்றிய அரசின் உயர்கல்வி சிறப்பு நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சேர்ந்துள்ளனர்.
  • 5
    2025-2026-ஆம் நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்காக உயர்கல்வி நிறுவனங்களில் சேர அனைத்து உயர்கல்வி சிறப்பு பயிற்சி வகுப்புகள் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, துவாக்குடி, மாதிரி பள்ளி, திருச்சி. EMRS அபிநவம் பள்ளி, சேலம் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, மல்லூர் EMRS குமிழி, செங்கல்பட்டு, மாதிரி பள்ளி, கடலூர் ஆகிய இடங்களில் அனைத்து வார இறுதி நாட்களில் ஆன்லைன் மற்றும் நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

Related Announcements & Press Releases