TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
அரசு நடவடிக்கை, சுரங்கம், சட்ட அமலாக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு உத்தரவிட்டார். மொத்தம் 76 குவாரிகள் ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்யப்பட்டு அறிக்கை பெறப்பட்டது.

மாவட்டங்கள்விருதுநகர்
முக்கிய நபர்கள்Dr. T.K. Prabhu

விரிவான சுருக்கம்

விருதுநகர் மாவட்டத்தில் கனிமங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுத்தலை தவிர்க்க, புவியியல் மற்றும் சுரங்கத்துறையினரால் மொத்தம் 76 குவாரிகள் ஆளில்லா விமானம் மூலமாக அளவீடு செய்யப்பட்டு அறிக்கை பெறப்பட்டது. இந்நிலையில், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு அவர்கள் 26.05.2026 அன்று காலை விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறையினரிடம் கலந்தாய்வு மேற்கொண்டார். மாண்புமிகு அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்யப்பட்ட குவாரிகளில் குத்தகை பரப்பிற்கு வெளியே குவாரிப் பணி மேற்கொண்ட 23 குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகின்றன. மேலும், ஆளில்லா விமானம் அளவீடு அறிக்கையின்படி உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவு.
  • 2
    ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்யப்பட்ட குவாரிகளில் குத்தகை பரப்பிற்கு வெளியே செயல்பட்ட 23 குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம்.
  • 3
    ஆளில்லா விமானம் அளவீடு அறிக்கையின்படி உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Announcements & Press Releases