Dr Tk Prabhu
Dr Tk Prabhu தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் தலைமையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநரகத்தில், கனிமவளத் துறை சார்ந்த பல்வேறு சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் தலைமையில் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு, சட்டபூர்வமாகவும், நியாயமாகவும் தொழில் செய்து, அரசுக்கு வருவாய் இழப்பை தடுத்து, பொது மக்களுக்கு தரமான கட்டுமானப் பொருட்கள் உகந்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வலியுறுத்தப்பட்டது.
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை செயல்பாடுகளை ஆய்வு செய்தார்
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு, புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கனிமங்கள் மூலம் அரசுக்கு வருவாயை அதிகரிப்பது, சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளை தடுப்பது மற்றும் குத்தகை செயல்முறைகளை விரைவுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அன்னாரது பிறந்தநாள் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.