TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
அரசு செயல்பாடு; கொள்கை ஆய்வு; வள மேலாண்மை

இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

விரிவான சுருக்கம்

இக்கூட்டத்தில், கனிமவள மேலாண்மையில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றும் வகையில், புவியியல் மற்றும் சுரங்கத் துறையானது, கனிமவள ஆய்வினை அறிவியல் பூர்வமான முறையில் மேற்கொண்டு, சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களுக்கு உகந்த வகையில் கனிமங்களை அகழ்ந்தெடுப்பது குறித்தும், கனிமக் குத்தகைக்கு விடப்பட்ட குவாரிகளைக் கண்காணிப்பதற்காக, குத்தகைப் பகுதிகளின் எல்லைகளை நிர்ணயம் செய்து குத்தகைக்கு விடப்பட்ட பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமத்தின் சரியான அளவைத் தீர்மானிப்பதற்காக ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்யும் முறை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் கனிம வருவாயைப் பெருக்குவதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கனிமவளங்களை நீடித்த வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் வகையில் முறையாக எடுத்துப் பயன்படுத்துவதற்கும், கனிமவள வருவாயை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    கனிமவள மேலாண்மையில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றுதல்.
  • 2
    புவியியல் மற்றும் சுரங்கத் துறையால் அறிவியல் பூர்வமான கனிமவள ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல், பொதுமக்களுக்கு உகந்த கனிம அகழ்தல்.
  • 3
    கனிமக் குத்தகைக்கு விடப்பட்ட குவாரிகளைக் கண்காணிக்கவும், குத்தகைப் பகுதிகளிலிருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமத்தின் சரியான அளவைத் தீர்மானிக்கவும் ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்துதல்.
  • 4
    சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல்.
  • 5
    கனிமவளங்களை நீடித்த வளர்ச்சிக்குப் பயன்படுத்தவும், கனிமவள வருவாயை மேம்படுத்தவும், சட்டவிரோத கனிமவள கடத்தலைத் தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தல்.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்