TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
விளையாட்டு மேம்பாடு, நிதி உதவி, விருதுகள்

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவியும் உபகரணங்களும் வழங்கினார்

மாண்புமிகு அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள், பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவியும், பாரா துப்பாக்கி சுடுதல் வீரர் மனோஜ்குமாருக்கு ரூ. 6.27 லட்சம் மதிப்பில் துப்பாக்கி சுடும் உபகரணங்களும் வழங்கினார். மேலும், ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையையும், ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் ஒரு விளையாட்டு வீரருக்கு நிதி உதவியையும் வழங்கினார்.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள், இன்று (09.06.2026) நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வில், பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ரூ.10 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இது, பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் & ஐரிஷ் பாரா பேட்மிண்டன் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான பயண மற்றும் பயிற்சிச் செலவுகளுக்காக 'தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை திட்டத்தின்' கீழ் வழங்கப்பட்டது. மேலும், பாரா துப்பாக்கி சுடுதல் வீரர் திரு. மனோஜ்குமார் அவர்களுக்கு மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்ல ஏதுவாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் ரூ.6,27,795/- மதிப்பில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு உபகரணத்தையும் வழங்கினார். ஹாங்காங்கில் மே மாதம் 2026-ல் நடைபெற்ற ஆசிய U 20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கங்கள் வென்ற திரு. ஜித்தின அர்ஜுனன் (ஆண்கள் நீளம் தாண்டுதல்), செல்வி. சாதனா ரவி (பெண்கள் மும்முறை தாண்டுதல்), செல்வி. ஜி.பாவனா (பெண்கள் 4x100 தொடர் ஓட்டம்) ஆகியோருக்கு தலா ரூ. 3 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்ற திரு. எஸ். ரஞ்சித் குமார் (ஆண்கள் 4x400 தொடர் ஓட்டம்) அவர்களுக்கு ரூ. 2 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. இந்த வீரர்கள் வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (CDS) கீழ் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். சீனாவில் நடைபெற உள்ள 2026 ஆசிய கடற்கரை சர்வதேச விளையாட்டுப் போட்டியில் கலந்துக் கொள்ளும் சைலிங் விளையாட்டு வீரர் சித்தரேஷ் நடேசனுக்கு உயர்தர உபகரணங்கள் வாங்குவதற்கு 'Elite திட்டத்தின்' கீழ் ரூ. 4.65 லட்சத்திற்கான காசோலையினை வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு. ஜெ. மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மரு. ரெ. சுமன், பொது மேலாளர் திருமதி. எல். சுஜாதா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான ரூ. 10 இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
  • 2
    பாரா துப்பாக்கி சுடுதல் வீரர் மனோஜ்குமார் அவர்களுக்கு ரூ. 6.27 லட்சம் மதிப்பில் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு உபகரணம் வழங்கப்பட்டது.
  • 3
    ஆசிய U 20 தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டது: திரு. ஜித்தின அர்ஜுனன், செல்வி. சாதனா ரவி, செல்வி. ஜி.பாவனா ஆகியோருக்கு தலா ரூ. 3 லட்சமும் (வெள்ளிப் பதக்கம்), திரு. எஸ். ரஞ்சித் குமார் அவர்களுக்கு ரூ. 2 லட்சமும் (வெண்கலப் பதக்கம்).
  • 4
    2026 ஆசிய கடற்கரை சர்வதேச விளையாட்டுப் போட்டிக்கான உயர்தர உபகரணங்கள் வாங்குவதற்கு சைலிங் விளையாட்டு வீரர் சித்தரேஷ் நடேசனுக்கு ரூ. 4.65 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

Related Announcements & Press Releases