TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Badminton

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Badminton குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

23 செப்., 2026PR #726

ஆசிய விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் ஆடவர் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் திரு. ஹரிஹரன் அவர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு

ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் ஆடவர் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் திரு. ஹரிஹரன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். அவரது திறமையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.

9 ஜூன், 2026

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவியும் உபகரணங்களும் வழங்கினார்

மாண்புமிகு அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள், பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவியும், பாரா துப்பாக்கி சுடுதல் வீரர் மனோஜ்குமாருக்கு ரூ. 6.27 லட்சம் மதிப்பில் துப்பாக்கி சுடும் உபகரணங்களும் வழங்கினார். மேலும், ஆசிய U20 தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகையையும், ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் ஒரு விளையாட்டு வீரருக்கு நிதி உதவியையும் வழங்கினார்.