ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் ஆய்வுக் கூட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (15.06.2026) மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டம், மாநில ஊரக வீட்டு வசதி திட்டம், சுனாமி வீடுகள் பழுது பார்த்தல் திட்டம், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம், இலங்கை தமிழர் அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் வீடுகள் கட்டுதல் திட்டம் போன்ற திட்டங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன. செயல்திறன் குறைவாக உள்ள மாவட்டங்களில் இத்திட்டங்களை விரைந்து முடிக்க மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். இத்திட்டங்களின் தற்போதைய அம்சங்கள் ஆராயப்பட்டன. புதிய மாநில வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆய்வுசெய்யப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் அதன் தற்போதைய வடிவமான VB G RAM G-2025 பற்றியும் ஆய்வுச் செய்யப்பட்டது. முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், ஊரக சாலைகள் பாராமரிப்பு, பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்களில் நிறைவு சதவிதம் குறைவாக உள்ள மாவட்டங்களில் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிக்க மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். மேலும், ஊரக பகுதிகளில் உள்ள 5000 சிறு பாசன ஏரிகளை புதுப்பித்தல், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), கழிவு மேலாண்மை ஆகியவற்றில் உரிய கவனம் செலுத்தி குறிப்பிட்ட இலக்கை அடைய விரைந்து செயல்படுமாறு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். மேற்கண்ட திட்டங்கள் தொடர்பாக புகார்கள் வரப்பெற்றால் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள துறையின் செயலாளருக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள். இவ்வாய்வுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் அரசு செயலாளர் திரு. பிரசாந்த் எம். வட்னேரே, இ.ஆ.ப மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1செயல்திறன் குறைவாக உள்ள மாவட்டங்களில் திட்டங்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்.
- 2புதிய மாநில வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு.
- 3குறைந்த நிறைவு சதவிகிதம் உள்ள மாவட்டங்களில் நிலுவையிலுள்ள சாலை மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்.
- 4ஊரக பகுதிகளில் உள்ள 5000 சிறு பாசன ஏரிகளை புதுப்பித்தல், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), கழிவு மேலாண்மை ஆகியவற்றில் உரிய கவனம் செலுத்தி விரைந்து செயல்பட அறிவுறுத்தல்.
- 5திட்டங்கள் தொடர்பாக புகார்கள் வரப்பெற்றால் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்.