TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
அரசு ஆய்வு

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக புனரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக புனரமைப்புப் பணிகள், புகார் தீர்வு நடைமுறைகள் மற்றும் கிடங்குகள், அரிசி ஆலைகளில் CCTV கண்காணிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

விரிவான சுருக்கம்

இன்று (03.07.2026) சென்னை, கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைமை அலுவலக பழைய கட்டிடத்தில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, பணிகளை விரைவுபடுத்தி நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முழுமையாக நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தினார். தேவையற்ற பழைய உபயோகமில்லாத பொருட்களையும், பயன்படுத்தப்படாத இருக்கைகளையும் அகற்ற உத்தரவிட்டார். அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது பணியிடங்களை எப்போதும் சுத்தமாகவும் முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும், சிறந்த அலுவலகச் சூழலை உருவாக்க சுகாதார பராமரிப்பு நடைமுறைகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் உழவர் உதவி மையத்தை பார்வையிட்ட அமைச்சர் அவர்கள், விவசாயிகள் பயன்பாட்டிற்காக செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 3540 மற்றும் WhatsApp எண் 95008 02465 ஆகியவை முறையாக செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்தார். நெல் கொள்முதல் மற்றும் பொது விநியோகத் திட்டம் தொடர்பான புகார்களின் பதிவு, நடவடிக்கை மற்றும் தீர்வு காணும் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தார். மேற்கண்ட தொடர்பு எண்களை பொதுமக்கள் எளிதில் அறியும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலக வளாகத்திலும், நேரடி கொள்முதல் நிலையங்கள், நெல் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான வட்ட செயல்முறை கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலைகளின் செயல்பாடுகளை தலைமை அலுவலகத்திலிருந்தே கண்காணிக்கும் CCTV கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலைகளில் பொருத்தப்பட்டுள்ள பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை உடனடியாக பழுதுநீக்கம் செய்து, அனைத்து கேமராக்களும் முழுமையான செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைமைப் பொறியாளர் திரு வெ.சுகுமாரன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முடித்தல்.
  • 2
    புனரமைப்பு நடைபெறும் இடங்களில் உள்ள தேவையற்ற பழைய பொருட்கள் மற்றும் பயன்படுத்தப்படாத தளவாடங்களை அகற்றுதல்.
  • 3
    பணியாளர்கள் தங்களது பணியிடங்களை எப்போதும் சுத்தமாகவும் முறையாகவும் பராமரிப்பதை உறுதி செய்தல்.
  • 4
    உழவர் உதவி மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்களை அனைத்து நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகங்கள், நேரடி கொள்முதல் நிலையங்கள் மற்றும் நெல் சேமிப்பு கிடங்குகளில் விளம்பரப்படுத்துதல்.
  • 5
    கிடங்குகள் மற்றும் நவீன அரிசி ஆலைகளில் பொருத்தப்பட்டுள்ள பழுதடைந்த CCTV கண்காணிப்பு கேமராக்களை உடனடியாக பழுதுநீக்கி முழு செயல்பாட்டிற்கு கொண்டு வருதல்.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்