#Public Distribution System
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Public Distribution System குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
செப்டம்பர் 5, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம்
செப்டம்பர் 5, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வருகின்ற 29.08.2026 அன்று eKYC சிறப்பு முகாம்
குடும்ப அட்டைதாரர்களுக்கான eKYC பதிவினை 100% நிறைவு செய்ய, 29.08.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு eKYC முகாம் நடைபெறும்.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சென்னையில் நியாய விலைக் கடையில் ஆய்வு
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள், சென்னை, கண்ணம்மாப்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை ஆய்வு செய்து, தரமான சேவை வழங்கவும், பொதுமக்கள் குறைகளைத் தீர்க்கவும் அறிவுறுத்தினார்.
சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 08.08.2026 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்
சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வருகின்ற சனிக்கிழமை 08.08.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.
ஆகஸ்ட் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம்
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லம் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 1346 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை இல்லம் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு இ-கேஒய் சி கைவிரல் ரேகை பதிவு முகாம் ஆகஸ்ட் 2, 2026 அன்று நடைபெறும்.
செய்தி வெளியீடு எண்: 409 - சென்னை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 608 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள் வழங்கினார்.
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், சென்னை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 608 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். மேலும், அத்தியாவசியப் பொருட்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை வலியுறுத்தினார்.
சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற 11.07.2026 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்
ஜுலை 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையின் 19 மண்டலங்களில் 11.07.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
மாண்புமிகு அமைச்சர் பொது விநியோகத் திட்டத்திற்கான நெல் கொள்முதல், சேமிப்பு, அரவை மற்றும் அரிசி விநியோகம் குறித்து ஆய்வு
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் தலைமையில், தமிழ்நாடு முழுவதும் நெல் கொள்முதல், சேமிப்பு, அரவை மற்றும் பொது விநியோகத் திட்டத்திற்கு அரிசி விநியோகம் தொடர்பான பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் – 2013ல் ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் எழுதியுள்ள கடிதம்
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் – 2013ல் ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக புனரமைப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு ப.வெங்கடரமணன் அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலக புனரமைப்புப் பணிகள், புகார் தீர்வு நடைமுறைகள் மற்றும் கிடங்குகள், அரிசி ஆலைகளில் CCTV கண்காணிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
தாயுமானவர் திட்டத்தில் ஜூலை 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம்
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், ஜூலை 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில், சென்னை மாநகரில் உள்ள 18 மண்டலங்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு பொது விநியோகத்திட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மூலம் வீடு தேடி விநியோகம் செய்யப்படும்.