'சர்வதேச நெகிழிப்பையில்லா நாள்' ஜூலை 3, 2026 அன்று கடைபிடிக்கப்பட்டது
'சர்வதேச நெகிழிப்பையில்லா நாள்' ஜூலை 3, 2026 அன்று அனுசரிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக துணிப் பைகளைப் பயன்படுத்த பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மயிலாப்பூர் மற்றும் கோயம்பேட்டில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மருத்துவர் வே. க. ராஜீவ் மற்றும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விரிவான சுருக்கம்
'சர்வதேச நெகிழிப்பையில்லா நாள்' ஜூலை 3, 2026 அன்று கடைபிடிக்கப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அருகிலுள்ள கடை வீதி மற்றும் கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையில் மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மருத்துவர் வே. க. ராஜீவ் தலைமையில் ஒரு மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன் அவர்கள் நெகிழிப்பைகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமை குறித்தும், கழிவுகளை அகற்றுவதில் தூய்மைப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சிரமத்தையும் எடுத்துரைத்தார். இந்த தினத்தில் நெகிழிப் பைகளுக்குப் பதிலாக துணிப்பைகளைப் பயன்படுத்தும் மாற்றம் நம்மிடமிருந்து துவங்கவேண்டும் என்று பொதுமக்களுக்கு வலியுறுத்தினார். மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மருத்துவர் வே. க. ராஜீவ் அவர்கள் மத்திய மற்றும் மாநில அரசின் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழி மாசுபாட்டை எதிர்கொள்வதற்கான முன்னெடுப்புகள் மற்றும் தனிநபர் பொறுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், துணிப்பைகளைப் பயன்படுத்துவதை அன்றாடப் பழக்கமாக மாற்றிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வின் போது, நெகிழிப்பைகளை தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகளைக் கடைபிடிப்பது மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச நெகிழிப்பையில்லா தின உறுதிமொழி ஏற்கப்பட்டு கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையில் பழைய துணிகளை பயன்படுத்தி துணிப்பைகள் தைத்து பொதுமக்களுக்கு வழங்கும் சிறப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. காலநிலை வீரர்கள் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களின் விழிப்புணர்வு அரங்கை மாண்புமிகு அமைச்சர் பார்வையிட்டார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் திரு. அனுராக் மிஸ்ரா இ.வ.ப., உறுப்பினர் செயலர் திரு. சரவணகுமார், வாரியத்தின் மூத்த அதிகாரிகள், கோயம்பேடு அங்காடி நிர்வாகக் குழுவின் நிர்வாக அதிகாரி திருமதி. இந்துமதி மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அருகில் உள்ள சந்தை மற்றும் கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தை பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டாயிரம் துணிப்பைகள் வழங்கப்பட்டன.
முக்கிய அறிவிப்புகள்
- 1'சர்வதேச நெகிழிப்பையில்லா நாள்' ஜூலை 3, 2026 அன்று கடைபிடிக்கப்பட்டது
- 2சென்னை மயிலாப்பூர் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் துணிப்பைகள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன
- 3பொதுமக்களுக்கு நெகிழி ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது
- 4மயிலாப்பூர் மற்றும் கோயம்பேடு சந்தைகளில் 2000 துணிப்பைகள் விநியோகிக்கப்பட்டன
- 5நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்க தனிநபர் பொறுப்பின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது