தமிழ் வளர்ச்சி, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று (19.05.2026) நடைபெற்றது.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் தலைமையில் இன்று (19.05.2026) தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை, தலைமைச் செயலக மொழிபெயர்ப்பு பிரிவு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மதுரை உலகத் தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆகியவற்றின் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய சூழலில் நாளைய தலைமுறைக்கும் தமிழைக் கொண்டு சேர்க்கும் வண்ணம் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆக்கத்துடனும் ஊக்கத்துடனும் பணிபுரிய வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு. வே. இராஜாராமன் இ.ஆ.ப., எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் திருமதி வெ. ஷோபனா இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள், உலகத் தமிழ் சங்க இயக்குநர் முனைவர் பர்வீன் சுல்தானா, தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) முனைவர் பாரத ஜோதி, பதிவாளர்(பொறுப்பு) திரு. கோ. பன்னீர்செல்வம், நிதி அலுவலர் திரு. ப. சிவகுமார், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குநர் (பொறுப்பு) திருமதி க. பவானி உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இன்றைய சூழலில் நாளைய தலைமுறைக்கும் தமிழைக் கொண்டு சேர்க்கும் வண்ணம் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆக்கத்துடனும் ஊக்கத்துடனும் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.