TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
அரசுச் செய்தி வெளியீடு - ஆய்வுக் கூட்டம்

நீர்வளத் துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் தலைமையில் நீர்வளத் துறையின் ஆய்வுக் கூட்டம் 15.06.2026 அன்று நடைபெற்றது.

விரிவான சுருக்கம்

இன்று (15.06.2026) ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் புதிய பாசனக் கட்டமைப்புப் பணிகள், ஏற்கனவே உள்ள பாசனக் கட்டமைப்புகளை சீரமைக்கும் பணிகள், நிலத்தடி நீர் மேம்பாட்டுத் திட்டப்பணிகள், வெள்ளத் தடுப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகள், அணை மேலாண்மை, கடல் அரிப்புத் தடுப்பு நடவடிக்கைகள், நீர்நிலைகளைப் புணரமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான பணிகள், ஆண்டுதோறும் நடைபெறும் பராமரிப்புப் பணிகள், தூர்வாரும் பணிகள், பருவமழைக்கு முந்தைய பணிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன. மேலும், சென்னையின் வெள்ளத் தணிப்புப் பணிகள், முந்தைய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பணிகள், புதியதாக அறிவிக்கப்பட்ட பணிகள், நிதி ஆதாரங்கள் போன்றவையும் ஆய்வு செய்யப்பட்டன. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். எதேனும் புகார்கள் வரப்பெற்றால் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்கள்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
  • 2
    எதேனும் புகார்கள் வரப்பெற்றால் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Related Announcements & Press Releases

Water Resources Department Review Meeting Held | TN SHORTS