#Maintenance
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Maintenance குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவர்கள் பிரம்மாண்ட திட்டங்களுக்காக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை பொறியாளர்கள் கவனத்துடனும், துடிப்புடனும் பணியாற்ற அறிவுறுத்தல்
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் வரவிருக்கும் பிரம்மாண்டமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தரம், காலக்கெடு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார், மேலும் சாலை பாதுகாப்பு மற்றும் நவீன கட்டிட வடிவமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை 27.07.2026 அன்று கள ஆய்வு செய்து தொடங்கி வைக்கிறார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் (27.07.2026) திங்கட்கிழமை அன்று கள ஆய்வு செய்து தொடங்கி வைக்கவுள்ளார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு ஆய்வில் மொத்தம் ஆறு முக்கிய இடங்களில் நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்படவுள்ளன.
ஓமன் நாட்டில் உற்பத்தி, இறுதி ஆய்வு மற்றும் பராமரிப்பு பணியாளர்கள் தேவை
ஓமன் நாட்டில் உற்பத்தி, இறுதி ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மாத ஊதியம் ரூ.44,000/- முதல் ரூ.54,000/- வரை வழங்கப்படும்.
நீர்வளத் துறை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் தலைமையில் நீர்வளத் துறையின் ஆய்வுக் கூட்டம் 15.06.2026 அன்று நடைபெற்றது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விரைந்து மின்தடை சீரமைக்க 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 ரோந்து வாகனங்களை அமைச்சர் துவக்கி வைத்தார்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பகிர்மான பழுது மற்றும் இதர காரணங்களால் எதிர்பாராமல் இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடங்கல்களை விரைந்து சீர்செய்யும் வகையில் 10 கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின் தடைநீக்க ரோந்து வாகனங்களின் இயக்கத்தினை மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.