TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
பணிநியமனம், நிர்வாகம், எரிசக்தித் துறை

எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (24.6.2026) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் (மின்னியல்) மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிச் சிறப்பித்தார்கள்.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (24.6.2026) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் (மின்னியல்) மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிச் சிறப்பித்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற எரிசக்தித் துறை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தின்போது, மின்சார வாரியத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குப் பல்வேறு நிலைகளில் உள்ள 70,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதும் ஒரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன், எரிசக்தித் துறையின் மனிதவளத்தை வலுப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்து, தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்கிடும் வகையில், ஓராண்டுக்குள் குறைந்தபட்சம் 15,000 பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 401 நபர்களுக்கும் வாரிய விதிமுறைகளின்படி, உடனடியாக பணிநியமன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்கள்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    எரிசக்தித் துறை சார்பில் 401 நபர்களுக்கு (383 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள்) பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
  • 2
    மின்சார வாரியத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள 70,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதும் தற்போதைய பிரச்சனைகளுக்கு ஒரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
  • 3
    ஓராண்டுக்குள் குறைந்தபட்சம் 15,000 பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்ய, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் தடையற்ற மின்சாரம் வழங்கிடும் வகையில் முதலமைச்சர் உத்தரவிட்டார்.
  • 4
    தேர்வு செய்யப்பட்ட 401 நபர்களுக்கும் வாரிய விதிமுறைகளின்படி, உடனடியாக பணிநியமன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டது.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்