#Recruitment
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Recruitment குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
ஐக்கிய அரபுநாடுகளில் Electrician Assistant, Electrician மற்றும் Electrical Fitter பணிகளுக்கு வேலைவாய்ப்பு
ஐக்கிய அரபுநாடுகளில் (துபாய்/அபுதாபி) Electrician Assistant, Electrician மற்றும் Electrical Fitter ஆகிய பணிகளுக்கு ஆண் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு நல்ல ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்படும்.
இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினர்கள் நியமனம்
2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவி மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படும் அரசு பணி அல்ல.
குழந்தைகள் நலக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமனம்
2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. த.சரத்குமார் அவர்கள் மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தலைமைச் செயலகத் துறைகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 41 நபர்களுக்கு துறை ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. த.சரத்குமார் அவர்கள் மனிதவள மேலாண்மைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தலைமைச் செயலகத் துறைகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணி தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 41 நபர்களுக்கு துறை ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்ட கண்காணிப்பிற்கான வள ஆய்வாளர்கள் நியமனம்
சமூக நீதித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டச் செயலாக்கத்தைக் கண்காணிக்க தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் 5 வள ஆய்வாளர்களை நியமிக்கிறது.
மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி -II) தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 22 உதவிப் பிரிவு அலுவலர்களுக்கு துறை ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
மாண்புமிகு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர், திரு. த. சரத்குமார் அவர்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு துறைகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி -II) தேர்வில் தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக தெரிவு செய்யப்பட்ட 22 நபர்களுக்கான துறை ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
பழங்குடியினர் நலத் திட்டங்களுக்கான திட்ட மேலாளர் மற்றும் உதவித் திட்ட மேலாளர் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு
தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குநரகம், மாநிலம் முழுவதும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தவும், கண்காணிக்கவும் ஒப்பந்த அடிப்படையில் திட்ட மேலாளர் மற்றும் உதவித் திட்ட மேலாளர் பணியிடங்களுக்கு விருப்பக் கோரிக்கை வரவேற்கிறது.
தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்குநரகம், தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், மாநில தத்தெடுப்பு வள நிறுவனம் மற்றும் WCD கட்டுப்பாட்டு அறை - குழந்தைகள் உதவி மையத்தில் பல்வேறு ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
நாடகக்கலையில் முதுகலை பட்டப்படிப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் தொடங்கப்படுகிறது
தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் நாடகக்கலையில் முதுகலை பட்டப்படிப்பு 2026-2027 ஆம் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. இப்பட்டப்படிப்புக்கான ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குநரகத்தில் (Directorate of Tribal Welfare) துறைசார் நிபுணர்களாக (Subject Matter Experts) மானுடவியலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குநரகம், பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி, ஆவணப்படுத்தல், கொள்கை உருவாக்கம், திட்ட மதிப்பீடு மற்றும் திறன் மேம்பாடு பணிகளுக்காக மானுடவியலில் துறைசார் நிபுணர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (24.6.2026) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் (மின்னியல்) மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ துறையில் செவிலியர் உதவியாளர் நிலை - II பணிக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில், 3% விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவத் துறையில் செவிலியர் உதவியாளர் நிலை - II பணிக்கான 31 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்குத் தகுதி அடிப்படையில் வாய்ப்பளிக்கப்படும்.