TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
வேளாண்மை, உணவு பாதுகாப்பு, அரசு கொள்கை, பருவமழை முன்னெச்சரிக்கை

நேரடி நெல் கொள்முதல், நெல் இயக்கம் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

இன்று (24.06.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை, கூட்டுறவுத் துறை மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்கள் தலைமையில் நேரடி நெல் கொள்முதல், நெல் இயக்கம் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஒருங்கிணைந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, 2026 ஜூன் 24 அன்று தலைமைச் செயலகத்தில் ஒரு ஒருங்கிணைந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு பி.வெங்கடரமணன், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு வ.காந்திராஜ் மற்றும் மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு ஆர்.வினோத் ஆகியோர் தலைமை தாங்கினர். நடப்பு கொள்முதல் பருவத்தில் விவசாயிகளிடமிருந்து அனுமதிக்கப்பட்ட ஈரப்பத அளவுடன் தரமான நெல்லை தடையின்றி கொள்முதல் செய்வது, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாகச் சேமித்து உரிய காலக்கெடுவில் அரவைக்கு அனுப்புவது மற்றும் பருவமழையை முன்னிட்டு விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமலும், நெல் மூட்டைகள் மழைநீரால் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்களில் பராமரிப்பு மேம்படுத்துதல், நெல் மூட்டைகள் பாதுகாப்பாக சேமிக்கப்படுவது தொடர்பாக விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, கொள்முதல் நிலையங்கள் மேடான பகுதிகளில் அமைந்து, மழைநீர் எளிதில் வடிந்துசெல்லும் வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நெல் அட்டிகள் சரியான முறையில் அமைக்கப்பட்டு, வெட்டுக்கற்கள் மற்றும் சவுக்குக் கட்டைகள் போன்ற பொருட்கள் பயன்படுத்தி பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் அடங்கிய அட்டிகளில் நெல்மணிகள் எப்போது, எந்த மாதங்களில் கொள்முதல் செய்யப்பட்டது என விவரங்கள் அடங்கிய அடையாள அட்டை (Tag) பொருத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. மழைக்காலங்களில் தார்ப்பாலின் உறைகள், HDPE வலைகள் மற்றும் நைலான் கயிறுகள் மூலம் நெல் மூட்டைகள் மழைநீரால் பாதிக்கப்படாத வகையில் பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. நெல் மூட்டைகளின் ஈரப்பதம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தேவையான காற்றோட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும், அவசரகாலத் தேவைகளுக்காக JCB இயந்திரம், மண்வெட்டி, கடப்பாரை, டார்ச் லைட் உள்ளிட்ட உபகரணங்கள் தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. அத்துடன், நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பத்தை நிர்ணயிக்கப்பட்ட அளவான 17%-க்கும் குறைவாக இருக்குமாறு கண்காணிக்கவும், சுற்றுப்புறத் தூய்மையை உறுதி செய்து, நெல் பதர்கள் தேங்காமல் உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேற்காணும் நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நெல் கொள்முதல் அலுவலர், தரக் கட்டுப்பாட்டு அலுவலர், மண்டல மேலாளர் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் உலர்த்திகள் (Dryers) வாங்கப்பட வேண்டும். அவை ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் அமைத்து, அனுமதிக்கப்பட்ட ஈரப்பத அளவுடன் தரமான நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய படிப்படியான செயல் திட்டம் வகுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நெல்லை சேமிப்பதற்கான கூடுதல் இடவசதிகளை உருவாக்குதோடு, வேளாண்மைத் துறை, கூட்டுறவுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களைக் கண்டறிந்து, அதனைப் பயன்படுத்துமாறும், தேவைக்கேற்ப கிடங்குகள் மற்றும் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மாண்புமிகு அமைச்சர்கள், அரிசியின் தரம் மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களின் தரத்தில் எந்தவித குறைபாடும் ஏற்படாத வகையில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், நுகர்வோர் பயன்பெறும் வகையில் சன்ன ரக நெல் வகை பயிர்கள் மற்றும் இதர தானிய வகை பயிர்கள் பயிரிட விவசாயிகளை ஊக்குவிக்குமாறு வேளாண்மைத் துறை அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டது. பொது விநியோகக் கடைகளில் காலிக் கோணிகள் குறித்து உரிய பதிவேடுகளை பராமரிக்கவும், தேங்கிக் கிடக்கும் காலி கோணிப் பைகளை உடனுக்குடன் சம்மந்தப்பட்ட கிடங்கிற்கு திரும்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு அலுவலரிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான நிலுவைத் தொகை ரூ.129.82 கோடியினை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தப்பட்டது. பசிபிக் பெருங்கடலில் உருவாகும் எல்-நினோ காலநிலை நிகழ்வு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    நடப்பு கொள்முதல் பருவத்தில் விவசாயிகளிடமிருந்து அனுமதிக்கப்பட்ட ஈரப்பத அளவுடன் தரமான நெல்லை தடையின்றி கொள்முதல் செய்தல்.
  • 2
    பருவமழை முன்னெச்சரிக்கையாக விவசாயிகளுக்கும் நெல் மூட்டைகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல்.
  • 3
    நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் திறந்தவெளி சேமிப்பு மையங்களில் பராமரிப்பை மேம்படுத்துதல்.
  • 4
    கொள்முதல் நிலையங்கள் மேடான பகுதிகளில் அமைவதையும், மழைநீர் வடிகால் வசதியையும் உறுதி செய்தல்.
  • 5
    நெல் அட்டிகளை சரியான முறையில் அமைத்து, கொள்முதல் விவரங்களுடன் கூடிய அடையாள அட்டை பொருத்துதல்.
  • 6
    மழைக்காலங்களில் தார்ப்பாலின் உறைகள், HDPE வலைகள் மற்றும் நைலான் கயிறுகள் மூலம் நெல் மூட்டைகளை மழைநீரால் பாதிக்கப்படாமல் பாதுகாத்தல்.
  • 7
    நெல் மூட்டைகளின் ஈரப்பதத்தை தொடர்ந்து கண்காணித்து தேவையான காற்றோட்ட வசதி ஏற்படுத்துதல்.
  • 8
    அவசரகாலத் தேவைகளுக்கான உபகரணங்களை (JCB இயந்திரம், மண்வெட்டி, கடப்பாரை, டார்ச் லைட்) தயார் நிலையில் வைத்திருத்தல்.
  • 9
    நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் 17%-க்கும் குறைவாக இருக்குமாறு கண்காணித்தல் மற்றும் சுற்றுப்புறத் தூய்மையை உறுதி செய்தல்.
  • 10
    வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் உலர்த்திகளை (Dryers) வாங்கி அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் நிறுவி தரமான நெல்லை கொள்முதல் செய்ய படிப்படியான செயல் திட்டம் வகுத்தல்.
  • 11
    நெல்லை சேமிப்பதற்கான கூடுதல் இடவசதிகளை உருவாக்குதல், வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களைப் பயன்படுத்துதல் மற்றும் புதிய கிடங்குகள்/கொள்முதல் நிலையங்கள் அமைப்பது குறித்து ஆலோசனை.
  • 12
    பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி மற்றும் பொருட்களின் தரத்தில் குறைபாடு ஏற்படாத வகையில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுதல்.
  • 13
    நுகர்வோர் பயன்பெறும் வகையில் சன்ன ரக நெல் மற்றும் இதர தானிய வகை பயிர்களை பயிரிட விவசாயிகளை ஊக்குவித்தல்.
  • 14
    பொது விநியோகக் கடைகளில் காலிக் கோணிகள் பதிவேடுகளை பராமரித்து, தேங்கிக் கிடக்கும் பைகளை உடனுக்குடன் கிடங்கிற்கு திருப்பி அனுப்புதல்.
  • 15
    நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான நிலுவைத் தொகை ரூ.129.82 கோடியினை தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NAFED) உடனடியாக விடுவிக்க வலியுறுத்துதல்.
  • 16
    எல்-நினோ காலநிலை நிகழ்வு தொடர்பான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல்.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்