TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
கனிமவள நிர்வாகம், சட்ட அமலாக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு

கல்குவாரிகளில் விதிமீறல்: 67 தற்காலிக நிறுத்தம், 469 வாகனங்கள் பறிமுதல், சட்டவிரோத சுரங்கம் கண்டறிந்து அரசு நடவடிக்கை

தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்குவாரிகளில் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில், விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 67 கல்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 469 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 78 இடங்களில் சட்டவிரோத கனிம சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளது.

விரிவான சுருக்கம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்குவாரிகளில் அரசு அனுமதி அளித்த அளவிற்கு அதிகமாக கற்கள் வெட்டியெடுக்கப்படுவதாகவும், மாநில சுற்றுச்சூழல் தாக்கமதிப்பீட்டு ஆணையம் (SEIAA) விதிமுறைகள் மீறப்படுவதாகவும் புகார்கள் வந்தன. மேலும், கண்காணிப்புக் குழுவினரும் முறையாக கண்காணிக்கவில்லை. இதன் அடிப்படையில், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு உத்தரவின் பேரில், கனிமவளத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளில், தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் விதிகளை மீறி செயல்பட்ட குவாரிகள் தற்காலிகமாக நிறுத்த உத்தரவிடப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் 431 கல்குவாரிகளில் ஆய்வு செய்யப்பட்டதில், 155 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, 67 குவாரிகள் தற்காலிகமாக நிறுத்தம் மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 88 குவாரிகளில் பணியினை நிறுத்த மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட ஆய்வில், 78 இடங்களில் சட்டவிரோத கனிமங்கள் எடுக்கப்படுவது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கனிமங்கள் ஏற்றிச் சென்ற 469 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சேலம், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் பட்டா நிலங்களில் அனுமதியின்றி சுண்ணாம்புக்கல் மற்றும் குவார்ட்ஸ் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இனிவரும் காலங்களில், சுரங்கப் பணிகள் ஒப்புதல் பெற்ற திட்டத்தின்படியும், குத்தகை நிபந்தனைகளின்படியும் நடைபெறவும், காலாவதியான மற்றும் சட்டவிரோத குவாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    விதிமீறல்களுடன் செயல்பட்டுவந்த 67 கல்குவாரிகள் தற்காலிகமாக நிறுத்திவைப்பு.
  • 2
    உரிய அனுமதியின்றி கனிமங்கள் ஏற்றிச் சென்ற 469 வாகனங்கள் பறிமுதல்.
  • 3
    சட்டவிரோதமாக 78 இடங்களில் கனிமங்கள் எடுக்கப்படுவது கண்டறியப்பட்டு நடவடிக்கை.
  • 4
    155 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, அபராத நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • 5
    88 குவாரிகளின் குவாரி பணியினை நிறுத்த மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • 6
    சேலம், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் பட்டா நிலங்களில் அனுமதியின்றி சுண்ணாம்புக்கல் மற்றும் குவார்ட்ஸ் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை.
  • 7
    இனிவரும் காலங்களில் சுரங்கம் மற்றும் குவாரி பணிகளானது ஒப்புதல் பெற்ற சுரங்க திட்டத்தின்படியும் மற்றும் குவாரி குத்தகை நிபந்தனைகள்படியும் குத்தகைதாரர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தல்.
  • 8
    குத்தகைகாலம் முடிவுற்று காலாவதியான குவாரிகள் மற்றும் தற்போது இயக்கத்தில் இல்லாத குவாரிகள் அல்லது சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுத்துச்செல்வது கண்டறியும்பட்சத்தில் சட்டவிதிகளின்படி அபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை.

Related Announcements & Press Releases

Quarry violations: 67 temporarily shut down, 469 vehicles seized, illegal mining identified and government action taken | TN SHORTS