தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்ட சுற்றுலா, விவசாய அறிவிப்புகள் மற்றும் அரசு நிர்வாக செய்திகள்.
வெற்றித் தமிழகம் தொலைநோக்கு ஆவணம் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த மூன்றாவது மண்டல மாநாடு
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் மதுரை, வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 15 மாவட்டங்களுக்கான 'வெற்றித் தமிழகம் - தொலைநோக்கு ஆவணம் - செயல்திட்ட முன்னெடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்' குறித்த மூன்றாவது மண்டல மாநாடு நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மேற்கொண்டுவரும் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.10.2026) சென்னை, எழிலகத்திலுள்ள வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வருகைதந்து, தற்போதைய வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்காக சென்னையைத் தவிர இதர மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துரையாடி, மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் நிலை குறித்து ஆய்வு செய்தார்.
ரூ.26.21 கோடி பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்தின் மூலம் பயனடைய விவசாயிகளுக்கு அமைச்சர் ர.வினோத் வேண்டுகோள்
தமிழ்நாட்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், 2026-27 ஆம் ஆண்டுக்கு ரூ.26.21 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட "பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்" என்ற ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் பயனடையுமாறு வேளாண்மை அமைச்சர் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு தெற்கு உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் வடகிழக்குப் பருவமழை மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மலைப்பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தனித்தேர்வர்களுக்கான முதனிலைத் தேர்வு, நவம்பர் 2026
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஜூலை 2027-இல் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்துகொள்ள தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கான முதனிலைத் தேர்வு நவம்பர் 2026-இல் நடைபெறும்.
விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களுக்கான சிறப்புப் பேருந்து ஏற்பாடுகள்
விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை முடிந்து செப்டம்பர் 14 மற்றும் 15, 2026 ஆகிய நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்துத் துறை சார்பில் விரிவான சிறப்புப் பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிளாம்பாக்கத்திற்கு 3,565 சிறப்புப் பேருந்துகள், மாதவரத்திற்கு 160, கோயம்பேட்டிற்கு 370 பேருந்துகள் மற்றும் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் கூடுதல் சேவைகளும் இதில் அடங்கும்.
அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் 1 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகள் ஈர்ப்பு
அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில், வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், மாண்புமிகு முதலமைச்சர் முன்னிலையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 8 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 5 திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு, 20 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
தென்காசி மாவட்டம் அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தென்காசி மாவட்டம் அடவிநயினார்கோவில் நீர்த்தேக்கத்திலிருந்து 29.07.2026 முதல் 31.10.2026 வரை 95 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் 2147.47 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற தனியார் சட்டக் கல்லூரிகளின் இணைப்பு (Affiliation) தொடர்பான விதிமுறைகள் குறித்த பொதுவான குறிப்பு.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், இந்திய வழக்குரைஞர் மன்றத்தின் ஒப்புதலைப் பெறத் தவறியதாலும், பல்கலைக்கழக விதிமுறைகளை மீறியதாலும், துளசி மகளிர் சட்டக் கல்லூரி, எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி, முகில் சட்டக் கல்லூரி ஆகிய மூன்று தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தற்காலிக இணைப்பு மற்றும் கூடுதல் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. சேர்க்கப்பட்ட மாணவர்களின் நலனைப் பாதுகாக்க ஒரு குழு அமைக்கப்படும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தொழிற்சாலைகளில் திடீர் கள ஆய்வு - மாசுக்கட்டுப்பாட்டு விதிமீறிய தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை
மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர். வே.க. ராஜீவ் அவர்கள் நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள சாயம், சலவை, தோல் மற்றும் பிற தொழிற்சாலைகளில் திடீர் கள ஆய்வுகளை மேற்கொண்டு, மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய தொழிற்சாலைகள் மீது மின் இணைப்பு துண்டிப்பு, இடிப்பு மற்றும் மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
செய்தி வெளியீடு: ஒப்பந்தப் பணிகளுக்கான ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2026 வெளியீடு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள், தலைமைச் செயலகத்தில் இன்று (01.07.2026) 'ஒப்பந்தப்பணிகளுக்கான ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2026' வெளியிட்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.6.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் ஆற்றிய உரையின் சாராம்சங்கள்:
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உரையாற்றினார், வெளிப்படையான, நேர்மையான, இலஞ்ச லாவண்யமற்ற நிர்வாகம், உடனடி மக்கள் சேவை, பாரபட்சமற்ற சட்டம் ஒழுங்கு, அடிப்படை வசதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு போன்ற முக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வலியுறுத்தினார்.