துறை வாரியான அறிவிப்புகள்
கைத்தறி, கைவினைப்பொருட்கள், துணிநூல் மற்றும் கதர்த்துறை
கோ-ஆப்டெக்ஸ் தகவல்கள், நெசவாளர் நலன்கள், கைத்தறி மானியங்கள் மற்றும் கைவினைப்பொருட்கள் மேம்பாடு.
10 செப்., 2026PR #637
பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15 முதல் ஜனவரி 31 வரை 139 நாட்களுக்கு பருத்தி மற்றும் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் சிறப்புத் தள்ளுபடி
பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு, செப்டம்பர் 15, 2026 முதல் ஜனவரி 31, 2027 வரை 139 நாட்களுக்கு பருத்தி மற்றும் பட்டு கைத்தறிப் பொருட்களுக்கு நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் மொத்தம் 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும்.
7 ஆக., 2026PR #513
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில், HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சி, "வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தைத் தொடங்கி வைத்து, சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர் விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில் HANDTEX 2026 கண்காட்சி, "வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தைத் தொடங்கி வைத்து, 2025-2026ஆம் ஆண்டிற்கான 11 சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு 22.25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.