TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்திற்கான அரசு அறிவிப்புகள், திட்டங்கள், உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் செய்திக் குறிப்புகள்.

2 ஜூன், 2026PR #156

மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் தமிழக சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்தார்

தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள் புதுதில்லியில் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்காரி அவர்களை சந்தித்து, மாநிலத்தின் சாலை உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் திட்டங்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்.

2 ஜூன், 2026

அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தை ஆய்வு செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ், சென்னையில் உள்ள தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரிய அலுவலகத்தை ஆய்வு செய்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 100 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

29 மே, 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் 45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கும் (நிலை 2) மற்றும் அரசு சட்டக்கல்லூரிகளில் 5 பொருளாளர் பணியிடங்களுக்கும் என மொத்தம் 50 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்

மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர், 45 அரசு உதவி வழக்கறிஞர்களுக்கும் (நிலை 2) மற்றும் அரசு சட்டக்கல்லூரி பொருளாளர் பணியிடங்களுக்கும் என மொத்தம் 50 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

25 மே, 2026

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர NEET, JEE போன்ற நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மூலம் பயன்பெற அழைப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர NEET, JEE போன்ற நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் 2023 முதல் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து செலவுகளையும் அரசு ஏற்கிறது.

21 மே, 2026

ஜப்பானில் சகுரா உயர்நிலைப்பள்ளி திட்டத்திற்கு தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு

ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சகுரா உயர்நிலைப்பள்ளி திட்டம் - JFY 2026 என்ற சர்வதேச அறிவியல் பரிமாற்றத் திட்டத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் 1 ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.