TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

மாவட்ட செய்திகள்

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்ட பட்டாசுத் தொழில் செய்திகள், சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் மற்றும் அரசு அறிவிப்புகள்.

26 மே, 2026

டாஸ்மாக் பணியாளர்கள் பணிக்குத் திரும்புமாறு மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. க.விக்னேஷ் அவர்கள் வேண்டுகோள்

டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என நிர்வாகம் உறுதியளித்த நிலையில், பணிக்குத் திரும்புமாறு மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. க.விக்னேஷ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

26 மே, 2026

விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு உத்தரவிட்டார். மொத்தம் 76 குவாரிகள் ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்யப்பட்டு அறிக்கை பெறப்பட்டது.

26 மே, 2026

விருதுநகர் மாவட்டத்தில் கனிம வள அறக்கட்டளை நிதியின் மூலம் ரூபாய் 20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறந்து வைப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் மானகசேரி கிராமத்தில், மாவட்ட கனிமவள அறக்கட்டளை நிதியின் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு திறந்து வைத்தார். மேலும், மாவட்டத்தில் கூடுதலாக 50 அங்கன்வாடி கட்டிடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

18 மே, 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் தொழில்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா தலைமையில் தொழில்துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தொழில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

12 மே, 2026

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்து

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு இந்தியப் பிரதமர் மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் உட்பட பல தேசிய மற்றும் சர்வதேச தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.