TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Additional Chief Secretary Cooperation Food And Consumer Protection Department

Additional Chief Secretary Cooperation Food And Consumer Protection Department தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

13 செப்., 2026PR #655

கே.எம்.எஸ் 2026-2027 பருவத்திற்கு சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2750, பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2600 என்ற உயர்த்தப்பட்ட விலையில் நெல் கொள்முதல்

நடப்பு கே.எம்.எஸ் 2026-2027-ம் பருவத்தில் சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2750/-, பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2600/- என்ற உயர்த்தப்பட்ட விலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் இது வரை 42,082 மெ.டன் நெல் கொள்முதல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையுடன், மாநில அரசின் ஊக்கத் தொகையுடன் சேர்த்து இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி விடுமுறை நாட்களிலும் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.