TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

C Joseph Vijay

C Joseph Vijay தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

13 ஆக., 2026PR #536

ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைப் பரிசீலித்து, அதற்கேற்ப உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைப் பரிசீலித்து, அதற்கேற்ப உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று (13.8.2026) கடிதம் எழுதியுள்ளார்.

7 ஆக., 2026PR #510

கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையானது, மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லது அந்தந்த மாநில அரசுகளால் தீர்மானிக்கப்படும் மாணவர் சேர்க்கை அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே நடைபெற வேண்டுமென வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc & AH) பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை மேல்நிலைப் பள்ளித் தேர்வு மதிப்பெண்கள் அல்லது அந்தந்த மாநில அரசுகளால் தீர்மானிக்கப்படும் அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

6 ஆக., 2026PR #506

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் எழுதியுள்ள கடிதம்

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது இன்று (6.8.2026) இலங்கைக் கடற்படையினர், மீனவர்களையும் அவர்களின் விசைப்படகையும் சிறைப்பிடித்துள்ள சம்பவம் குறித்து மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரவே தாம் இக்கடிதத்தை எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இச்சம்பவத்தில், இயந்திரக் கோளாறு காரணமாக அப்படகு நெடுந்தீவு கரையை ஒட்டித் தரைதட்டி நின்ற நிலையில், சர்வதேச கடல் எல்லைக்கோட்டைத் (IMBL) தாண்டியதாகக் கூறி, அப்படகையும் அதில் இருந்த மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.