TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Dr M Sai Kumar

Dr M Sai Kumar தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

7 அக்., 2026PR #801

தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான 14-வது குழுப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களுக்குக் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான 14-வது குழுப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் கலந்துகொண்டு, சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

28 செப்., 2026PR #750

ரூ.10.25 கோடி செலவில் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்ட மதுரை, காந்தி நினைவு அருங்காட்சியகம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.9.2026) மதுரையில், 10 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் பாரம்பரியம் மாறாமல் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

21 செப்., 2026PR #709

செய்தி வெளியீடு - வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (21.9.2026) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.