TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அதிகாரப்பூர்வ பக்கங்கள்

Jcd Prabhakar

Jcd Prabhakar தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.

27 செப்., 2026PR #746

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் 122-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்கள் சென்னை, எழும்பூரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

17 செப்., 2026PR #686

தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் - சமூக நீதி நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

சமூக நீதி நாளாக அனுசரிக்கப்படும் தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர்கள் சென்னை, அரசு பன்னோக்கு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.